பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டு. அமைச்சர் அழும்பில் வேள் செங்குட்டுவன் அரசியல் நெஞ்சை அள்ளும் செஞ்சொற்காவியமாகிய சிலப் பதிகாரத்தில் பேசப்படும் மன்னருள்ளே ஒருவன் செங் குட்டுவன். வஞ்சிமாநகரைத் தலைநகராகக் கொண்டு சேர நாட்டை ஆண்ட வீரப் பெருவேந்தகிைய செங் குட்டுவன் தனது ஆட்சியைத் திறம்பெற நடாத்தி ன்ை. அவன் தனது அரசியலை இனிது நடத்த ஐம் பெருங் குழுவையும் எண்பேராயத்தையும் அமைத் திருந்தான். அமைச்சர், புரோகிதர், சேனபதியர், தூதுவர், சாரணர் என்னும் ஐவரும் அரசர்க்குரிய ஐம்பெருங் குழுவினர் ஆவர். கரணத்தியலவர், கரும விதிகள், கனகச் சுற்றம், கடை காப்பாளர், நகரமாந்தர், படைத் தலைவர், யானைவீரர், குதிரைவீரர் என்னும் எண்மரும் எண்பேராயத்தார் எனப்படுவர். செங்குட்டுவனது அரசியலில் இவ் இருபெருங் குழுவினரும் பெருமை. யுற்று விளங்கினர். இவர்கள் அனைவருக்கும் தலைமை பூண்டு விளங்கினுேர் அமைச்சர்களே. அழும்பில் காட்டுத் தலைவர் செங்குட்டுவனுக்கு வாய்த்த அமைச்சர் பலருள் தலைமை தாங்கிய முதலமைச்சர் அழும்பில் வேள் என் பார். இவர் அழும்பில் என்னும் வளம் படைத்த நாட் டின் தலைவராவார். அழும்பில் என்பது பாண்டி நாட் டில் உள்ளதோர் ஊராகும். அவ்வூரைச் சூழ்ந்த நிலப் பகுதியே அழும்பில் நாடு எனப்படும். அவ்வூரும் இ. அ.-8