பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை வீடும் நாடும் வியத்தகு முறையில் விழுமியதாக நிகழ் வதற்கு மதியமைச்சர் இன்றியமையாதவராவர். வீட்டுக்கு வாய்ந்த அமைச்சர் வாழ்க்கைத் துணைவியராவர். காட்டுக்கு வாய்ந்த கல்லமைச்சர் வேந்தற்கு வேண்டும். ஆமப்பு களுள் முதற்கண் கிற்குமுதன்மையாாவர். வாழ்க்கைத் துணையை விறல் மந்திரி மதியும்’ எனச் சிறப்பித்துக் கூறுவர் ஆன்ருேர். ஆட்சித் தலைவர்க்கு அமைச்சர் கண்ணரிய கண்னும் போர்வையும் போன்றுள்ளார். அவ்வமைச்சர்கள் சொல் வன்மை, வினைத்துாய்மை, வினைத்திட்பம், வினைசெயல் வகை முதலிய நற்பண்புகள் வாய்ந்த நல்லோராயிருத்தல் வேண்டும். ஆட்சித் தலைவர்களும் அமைச்சர் சொல்வழி கிற்றல் வேண்டும். மாணவரும் நோயாளரும் முறையே ஆசிரியர் சொல்வழியும் மருத்துவர் சொல்வழியும் கின் ருெழுக அறிவும், உடல்நலமும் செறியப்பெற்றுத் திகழ்வர். அதுபோல் ஆட்சித் தலைவரும் அமைச்சர் சொல்வழி நிற்க கலமெய்துவர். நாடும் செழித்து முன்னேற்றமெய்தும். அத்தகைய அமைச்சர் எத்தகையவராக இருப்பரென்ப தனே இந் நூலாசிரியர் நன்கெடுத்து விளக்கியுள்ளனர். அங்கனங் கூறியவற்றுள் பழமொழி நூலாசிரியர் கூறி யுள்ள தாயரொப்பும், குமரகுருபா முனிவானர் கூறியுள்ள யானைப்பாகரொப்பும் ஊன்றி உன்னற்குரியன. மேலும் இந்நூல் : தயரதன் அமைச்சர், மனுவேங் தனமைச்சர், அழும்பில்வேள், ஒளவையார், குலச்சிறையார்