பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதியமான் மதியமைச்சர் 45 கபிலரைப் போலவும், ஆயைப் பாடிய மோசியைப் போலவும் இவன் புகழ் விளங்குமாறு விரிவாகப் பாடி ய்வர் ஒளவையார் ஒருவரே. ஒளவையார் அதியமானை அடைதல் அதியமான் நெடுமான் அஞ்சியின் படைத் திறத் தையும் கொடைத் திறத்தையும் பலர் வாயிலாகக் கேட்டறிந்த ஒளவையார் அவன் வாழும் தகடுரை நோக்கிச் சென்ருர். அவனைக் கண்டு அவன் புகழ் பாடினர். தமிழ்மூதாட்டியாராகிய ஒளவையாரின் செவ் விய புலமையையும் செய்யுள் நலனையும் கண்டு அதிய மான் கழிபேருவகை கொண்டான். அவரைத் தன் அவைப் புலவராகவும் மதியமைச்சராகவும் ஏற்று மகிழ்ந் தான். படை வலியால் பன்னாட்டு மன்னரையும் வென்று பகைவரைப் பெருக்கி வைத்திருந்த அதியமா னுக்கு ஒளவையாரின் அறிவுரை மிகவும் இன்றியமை யாததாக இருந்தது. அதனை உணர்ந்த அதியமான் அவரை அமைச்சராக ஏற்றதில் வியப்பில்லை. அத ேைலயே அவன் ஒளவையாரைச் சிறுபொழுதும் பிரிதற்கு விரும்பினைல்லன். அவர் எப்பொழுதும் அருகிலிருந்து அறிவுரையும் ஆறுதலுரையும் தனக்குக் கூறிக்கொண்டிருத்தலைப் பெரிதும் விரும்பினன். பாணர் மரபில் தோன்றிய பாவையார் அதியமான் அவையில் அமைச்சராக விளங்கிய ஒளவையார் பாணர் மரபில் தோன்றிய பாவையார் ஆவர். யாழிசைத்துப் பண்ணமையப் பாடும் மரபினர் பாணர் எனப்படுவர். அப்பாணர் குலத்தில் தோன்றிய பெண்களைப் பாடினியர், விறலியர் என்ற பெயர்களால்