பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதியமான் மதியமைச்சர் 49. அதியமான் வேட்கையும் அமைச்சர் அருஞ்செயலும் வள்ளல் அதியமான் உடல்வலியும் படைவலியும் பெரிதும் படைத்தவன். அவன் போர் வேட்கைமிக்க பெருவீரனுய் விளங்கினன். அதல்ை அவனுக்குப் பகைவர் பலராயினர். அப் பகைவரால் அதிய மானுக்கு ஊறு நேராவாறு காப்பதைத் தமது கட னெனக் கருதினர் ஒளவையார். தம்மை ஆதரிக்கும் அரசனும் அவன் நாட்டு மக்களும் அமைதியான நல் வாழ்வை நடத்தவேண்டுமே என்று கருத்துட் கொண் டார். ஆதலின் தகடுர் நாட்டின்மீது படையெடுக்க முற்படும் பகைவர்களைப் பரிசிலாளரைப்போல் சென்று கண்டு நல்லுரை நவின்று வருவார். அதியமான் படைவலியை எடுத்துரைத்துப் பகைவர்க்கு அச்சம் ஊட்டி வருவார். அம்முறையில் ஒளவையார் அதிய மான் பகைவர்களை நோக்கிக் கூறிய அறிவுரைகள் பல. அதியமான் பகைவர்க்கு அறிவுரை அதியமான் தன்பால் வரும் இரவலர்க்கு எண் ணற்ற தேர்களைப் பரிசாக வழங்குவான். புலவர்கள் அவன் தேர்ப்படைக்கு உவமையாக மாருது பெய்யும் மழைத்துளிகளைக் குறிப்பர். அங்ங்ணமாயின் அவன் தேர்ப்படையின் அளவை என்னல் இயம்பவொண் னுமோ? அவன் நாட்டுத் தச்சர் ஒவ்வொருவரும் நாள் ஒன்றிற்கு எட்டுத் தேர்களைச் செய்யும் தொழில் திற முடையார். கோடுகளில் செறித்த இருப்புத் தொடிகள் பிளக்குமாறு பகைவர் தம் கோட்டைவாயிற் கதவைக் குத்திச் சிதைக்கும் குன்றனய யானைப்படையை மிகுதி யாகக் கொண்டவன். போர்க்களத்தில் கூடித்தாக்கும் கொடும்படை வீரர்களின் மார்பு குலைந்து பிளந்து இ. அ.-4