பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதியமான் மதியமைச்சர் 51 கல் பிளக்கவும் செல்லவல்ல எருதிற்குப் போதற்கரிய வழியிது என்று கூறத்தக்க வழியும் உளதோ? இவை போன்றே நீ போர்க்களம் நோக்கிப்புறப்படின் நின்னை எதிர்க்கவல்ல வீரரும் உளரோ! உலகில் இலராதலின் நீ களம்புகும் கருத்தை ஒழிக!' என்று அதியமானுக் கும் அறிவுரை கூறி அவனது போர் வேட்கையைத் தணிக்க முயலுவார். அமைச்சரின் துணிவு அமைச்சராகிய ஒளவையார் கூறும் அறிவுரைகள் சில சமயங்களில் அதியமான் செவியில் ஏறுவதில்லை. பகைவரை அச்சுறுத்திப் பணிய வைத்தல் இயலாது; ஆதலின் அவரைப் போரில் எதிர்த்தே வெல்லு வேன்' என்று அவன் வெகுண்டுரைப்பான். அவன் அவ்வாறு வெகுண்டபோதும் ஒளவையார் அவனுக்கு அறிவுரை கூற அஞ்சுவதில்லை. நாட்டின் அமைதியை யும் மக்கள் நலனையுமே பெரிதாகக் கருதிய அம்மை யாருக்கு அவனது வெகுளி சிறிதும் வேதனையை விளைக்கவில்லை. இங்ங்ணம் அதியமானுக்கும் அவன் பகைவர்க்கும் அறிவுரை கூறி நாட்டின் அமைதியைக் காக்க நாட்டங் கொண்டார். - தொண்டைமானிடம் தூது போதல் காஞ்சிமா நகரைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டை ஆண்ட தொண்டைமான் அதிய மான்பால் பகைமை கொண்டான். அவன் தன்பால் படைவலி மிக்கிருப்பதாக எண்ணிச் செருக்குற்ருன், அவனது அறியாமையைத் தெரிந்த அதியமான், போரின் கொடுமையையும், தன்னை எதிர்த்தால்