பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதியமான் மதியமைச்சர் 58 துன்பம் விளைக்கும் செய்திகளைச் சொல்லுங்கால் இனிய சொற்களால் மனம் மகிழுமாறு சொல்லுதல் இவை போன்ற சொல்வன்மையால் தம் அரசர்க்கு நன்மை விளைக்கும் உண்மையாளராய் இருத்தல் வேண்டும். செய்திகளைச் சொல்லுங்கால் பகை மன்னர் சினந்து நோக்கின் அஞ்சாது காலத்தொடு பொருந்தக் கூறித் தாம் சென்ற கருமத்தை முடிக்க வல்லவராய் இருத்தல் வேண்டும். கடமையை உணர்ந்து, தம் செயலை முடிக்கும் காலத்தை நோக்கி, அதனைச் சொல் லுதற்குரிய இடத்தைத் தெரிந்து, சொல்லும் முறைமை யெல்லாம் முன்பே ஆராய்ந்து வகுத்துரைக்கும் வல்லமையுடையாரே தலையாய தூதராவர். தம் அரசர் சொல்லியனுப்பிய சொற்கள், தம் உயிர்க்கே இறுதி தருமாயினும் அதற்கு அஞ்சி ஒழியாது, தம் அரசர் கருத்தை வேற்றரசர்பால் விளக்கியுரைப்பவரே சிறப் புடைய தூதராவர். அரசியல் தூதர் ஒளவையார் தலையாய தூதர்க்கு அமைய வேண்டிய நிலையாய பண்புகளெல்லாம் ஒருங்கே அமையப் பெற்ற ஒளவை யார் அதியமான் தூதராகக் காஞ்சிமாநகரம் புகுந்தார். அவர் தூதராக வந்தாலும் அருந்தமிழ்ப் புலமை யாளர் என்பதை நன்குணர்ந்த தொண்டைமான் அவரை அன்புடன் வரவேற்று உபசரித்தான். அவர் தன்பால் வந்துள்ளதன் நோக்கத்தையும் குறிப்பால் அறிந்துகொண்டான். அதியமானினும் மிகுந்த படை வலியுடையோம் என்பதை அவருக்கு அறிவித்துவிட் ட்ால் அவர் ஒன்றுமே பேசாது சென்றுவிடுவார் என்று எண்ணினன். அவன் தனது எண்ணத்தை வாயால்