பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 இலக்கிய அமைச்சர்கள் கூற விரும்பவில்லை. அவருக்குத் தன் அரண்மனை முற்றும் சுற்றிக் காட்டுவான்போல அ வ ைர அழைத்துச் சென்று பல இடங்களையும் காட்டினன். படைக்கலங்களை அணிசெய்து வைத்திருக்கும் தன் படைக்கலச் சாலைக்குள்ளும் அவரை அழைத்துச் சென்றன். ஆங்கே அணியணியாக அடுக்கி வைத் திருக்கும் படைக்கலம் அனைத்தையும் பார்க்குமாறு செய்தான். தொண்டைமானுக்கு அறிவுரை தொண்டைமான் உள்ளக்குறிப்பைத் தெள்ளிதின் உணர்ந்து கொண்டார் ஒளவையார். தொண்டை மானே தூதுவந்த மூதாட்டியாருக்குத் தக்க அறிவூட்டி னுேம் என்ற பெருமித உணர்ச்சியுடன் நின்ருன். அதனைக் கண்ட ஒளவையார், அரசே! இங்குள்ள வேற்படையெல்லாம் எத்துணை அழகுடன் விளங்கு கின்றன! பீலியும் மாலையும் சூட்டப்பெற்றும் திரண்ட காம்பு திருத்தப் பெற்றும் நெய் பூசப்பெற்றும் ஒளி யுடன் திகழ்கின்றன. இவையெல்லாம் காவலையுடைய கோவிலின்கண் அழகாக வைக்கப்பட்டுள்ளன. ஆனல் அதிகமானுடைய வேற்படைகளோ காவல் மனையில் வைக்கப் பெறவில்லை. அவையெல்லாம் பகைவரைக் குத்திக் குத்திக் கங்கும் நுனியும் முறிந்து சிதைந்தவை. அவை செப்பனிடுதற்காகக் கொல்லன் உலைக்கள மாகிய சிறிய கொட்டிலில் எந்நாளும் கிடக்கும்” என்று கூறித் தொண்டைமானை இகழ்ந்து நோக்கினர். 'இவ்வே, பீலி யணிந்து மாலை குட்டிக் கண் திரள் நோன்காம் திருத்திநெய் யணிந்து கடியுடை வியனக ரவ்வே யவ்வே பகைவர்க் குத்திக் கோடுதுதி சிதைந்து