பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதியமான் மதியமைச்சர் கொற்றுறைக் குற்றிலம் மாதோ என்றும் உண்டாயின் பதங்கொடுத்(து) 'இல்லாயின் உடனுண்னும் இல்லோர் ஒக்கல் தலைவன் அண்ணலெங் கோமான் வைந்நுதி வேலே. என்ற அரிய பாடலைப் பாடினர். தூதரின் நாகலம் அது கேட்ட தொண்டைமான் உள்ளம் மகிழ்ச்சி யால் துள்ளியது. ஒளவையார் தன் கருத்தையும் படைப்பெருக்கையும் நன்ருகத் தெரிந்து கொண்டார் ; இனி அதியமான் நமக்கு அஞ்சி அடிபணிவான் என்று தவருகக் கருதிஞன். ஒளவையாரோ அவனது அறியாமைக்கு இரங்கினர். அவர் அதியமான் அனுப்பியது.தராக வந்தவர். தம் கடமையைத்தவருது செய்துவிட்டார். அவர் தொண்டைமான் முன்னர்ப் பாடிய பாடல் வஞ்சப் புகழ்ச்சியாக அமைந்தது. தொண்டைமான் படைக்கலச் சிறப்பைப் பாராட்டுவது போலத் தோன்றிலுைம் அது பழிப்புரையே. அதிய மானை இகழ்ந்துரைப்பது போல இருந்தாலும் புகழ்ந் துரைக்கும் பொன்மொழியாகவே அப்பாடல் அமைந் தது. தொண்டைமான் படைக்கலங்கள் போரில் பயன்படுத்தப் படாதவை ; காவற்கூடத்தை விட்டு என்றும் அகலாதவை; போர்க்களத்தையே கண்டறி யாதவை; அதனுல் அவை என்றும் அழகுடன் இருக் கின்றன என்று புலப்படுத்தி, அவனது ஆண்மையை நயமாக எள்ளி நகையாடிய ஒளவையாரின் நாவன் மையை என்னென்பது ! இவ்வாறு தொண்டைமான் படைக்கலத்தைப் பழித்துரைத்த பைந்தமிழ் மூதாட்டியார் அதியமான்