பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 இலக்கிய அமைச்சர்கள் ஆனைமலை முதலான பலமலைகளில் வாழுமாறு செய்தான். அவர்கட்கு வேண்டுவன வெல்லாம் விரும்பியுதவின்ை. பாண்டி நாட்டில் சமணம் பரவுதல் மாறன் துணையால் மதுரையைச் சூழ்ந்து வாழ்ந்த சமணர்கள் தங்கள் சமயத்தைப் பாண்டிய நாட்டில் பரப்பத் தொடங்கினர். சின்னுளில் மன்னனும் சமணர் னுயின்ை. அன்று முதல் நாட்டில் சமணம் காட்டுத் தீப்போல் பரவத் தொடங்கியது. 'மன்னன் எவ்வழி, குடிகள் அவ்வழி' என்பது பழமொழியன்ருே மக்கள் எல்லோரும் பரசமயம் புகலாயினர். மதுரைமா நகர் வீதியெல்லாம் பாயும் பீலியும் தாங்கிய பாவிகள் நட மாடினர். நகரெங்கனும் பாழிகளும் சமணர் பள்ளி களும் தோன்றத் தொடங்கின. அங்கயற்கண்ணியுடன் சிவபிரான் அமர்ந்தருளும் ஆலவாய்த் திருக்கோவி லுக்குச் சென்று வழிபடுவார் சிலராயினர். திருநீறு புனைந்த சிவனடியாரைக் காண்டல் அரிதாயிற்று. அமைச்சரின் கவலை தமிழகத்தின் தொன்மை வாய்ந்த உண்மைச் சமயமாகிய சைவம், பாண்டிய நாட்டில் நாளுக்குநாள் நலிந்து வருதலைக் கண்ட குலச்சிறையார் உள்ளம் குலைந்தார். அவர் சிவனடி மறவாத சிந்தையர் ; சிவ னடியாரைப் போற்றிப் பரவும் புண்ணியர் ; மேனி யெல்லாம் வெண்ணிறு புனைந்து மகிழும் நன்னீர் மையர். இத்தன்மையராகிய அமைச்சருக்கு அரசன் போக்கும் நோக்கும் அளவற்ற கவலையைத் தந்தன. மன்னன் பெருந்தேவியாராகிய மங்கையர்க்கரசியாரும்