பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைச்சர் குலச்சிறையார் 59 சிவம் பேணும் தவமுடையாராதலின் மன்னன் மாற்றங் கண்டு மனம் கவன்ருர். அரசியாரும் அமைச் சரும் நாட்டில் பரசமயம் பரவும் நிலையை மாற்றுதற்கு யாது செய்வதெனச் சூழ்ந்தனர். மன்னனிடம் தனித் தனியே சென்று இன்னுரைகள் பல இயம்பினர். இருவர் செய்த பெருமுயற்சியாலும் சிறுபயனும் விளைய வில்லை. சம்பந்தர் சிறப்புணர்தல் அந்நாளில் சீர்காழியில் தோன்றிய திருவருட் செல்வராகிய திருஞான சம்பந்தர் திருமறைக் காட்டிற்கு எழுந்தருளியுள்ள நற்செய்தியைச் சிவனடியார் சிலர் வந்தியம்பக் கேட்டனர். அப்பெருமான் திருமறைக் காட்டில் வேதத்தால் பண்டு அடைக்கப்பெற்ற திருக் கோவில் பெருங்கதவங்களை அப்பரடிகளின் ஒப்பிலாத் துணையுடன் திறக்கவும் அடைக்கவும் செய்த அற்புத நிகழ்ச்சியைப் பற்றியும் சொல்லக் கேட்டனர். அவர் வேதநெறி தழைத்தோங்கவும் மிகுசைவத்துறை விளங் கவும் பூத பரம்பரை பொலியவும் பெற்ருேர் செய்த பெருந்தவத்தால் அவதரித்தருளிய ஞானச் செல்வர் என்பதை முன்பே குலச்சிறையார் அறிந்தவர். ஆதலின் அப்பெருமானை மதுரைமா நகருக்கு எழுந் தருளுமாறு செய்து, சைவத்தின் தெய்வமாண்பை நிலை நாட்ட வேண்டும் என்று நினைந்தார். அம்முறையில் பாண்டியன் மனத்தையும் மாற்ற வேண்டும் என்று மனங்கொண்டார். அரசியாருக்கு அறிவுறுத்தல் இவ்வாறு உளங்கொண்ட குலச்சிறையார் தம் கருத்தை அரசியாருக்கு அறிவித்தனர். கணவன்