பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைச்சர் குலச்சிறையார் 63 தவத்தால் இன்று தாங்கள் எழுந்தருளினிர்கள். நிகழ் காலத்தில் தங்கள் மங்கள வருகையால் எதிர்காலம் இனிதமையும் பேறு பெற்ருேம். ஆகவே எந்நாளும் இறைவன் திருவருளுக்குக் குறைவில்லை. இனி இந் நாடும் மன்னனும் உய்தி பெற்று எங்கும் வெண்ணிற் ருெளி பொங்கும். அதல்ை யாங்கள் பெறற்கரிய மேன் மையைப் பெற்ருேம்,' என்று குலச்சிறையார் உளங் குளிர்ந்து மொழிந்தார். சிவஞானச் செல்வராகிய சம்பந்தரை அன்புடன் வரவேற்கும் அமைச்சரின் பொருள் நிறைந்த வாசகம் அவரது நாநலத்தை நன்கு விளக்குவதாகும். ' சென்றகா லத்தின் பழுதிலாத் திறமும் இனி.எதிர் காலத்தின் சிறப்பும் இன்றெழுங் தருளப் பெற்றபே(று) இதல்ை எற்றைக்கும் திருவருள் உடையேம் ; நன்றியில் நெறியில் அழுந்திய நாடும் கற்றமிழ் வேங்தனும் உய்ந்து வென்றிகொள் திருற்ே ருெளியினில் விளங்கும் மேன்மையும் படைத்தனம் ' என்பார். இவ்வாறு சம்பந்தருக்கு இன்மொழி) பகர்ந்த அமைச்சர், மேலும் பெருமானே! தாங்கள்.இங்கு எழுந்தருளும் பெருமையைக் கேட்டு, மங்கையாக்கரசி யார் பெறுதற்கரிய பேறு பெற்ருலெனப் பெருமகிழ் வுற்ருர் ; நம் பெருவாழ்வே எழுந்தருளியது ; அவரை எதிர்கொண்டு அடிபன்னிந்து அழைத்து வருவீர் என்று என்னைப் பணித்தருளினர்,' எனக்கூறித் தொழுதனர். ஆலவாய்க் காட்சி திருஞானசம்பந்தர் அவருக்கு அருள்செய்து நிற் கும் அச்சமயத்தில் மதில் சூழ்ந்த மதுரைமா நகரம்