பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 இலக்கிய அமைச்சர்கள் சேய்மையில் தெரிந்தது. உடனே சம்பந்தர் அங்கு நின்ற தொண்டரை நோக்கிக், ' கண்ணுதற் பெரு மான் அமர்ந்தருளும் புண்ணியத் திருஆலவாய் எம் மருங்குள்ளது?’ என்று வினவினர். அதுகேட்ட அடியவர் ஒருவர், “அதோ! நறுமலர்ச் சோலைகள் சூழ நடுவண் வானளாவிய கோபுரத்துடன் குலவும் திருக்கோவிலே திருவாலவாயாகும்,' என்று வணங் கிக் கூறினர். சம்பந்தர் பாராட்டு அங்கு நின்றே கோபுரக் காட்சியைக் கண்டருளிய சம்பந்தர் மண்டுபேரன்பால் மலர்க்கரம் குவித்து மண் மிசை விழுந்து பணிந்தார். மங்கையர்க்கரசி' என்று தொடங்கும் இன்னருட் பதிகம் பாடிப் பரவினர். அப் பதிகத்தில் மங்கையர்க்கரசியார், குலச்சிறையார் ஆகிய இருவருடைய தவப்பணியையும் சிவப்பணியையும் பாராட்டி உளங்கனிந்து உருகிப் பாடினர். எங்கும் சமணிருள் பெருகவும்.மதுரைத் திருநகரில் இவ்விரு வர் மட்டும் சிவனருள் எண்ணித் திகழ்ந்தனர் என் பதை அறிந்து மகிழ்ந்த பிள்ளையார் அப்பதிகத்தில் இவ்விருவரையுமே மாறிமாறிப் புகழ்வாராயினர். குலச்சிறையார் கலங்கள் அமைச்சராகிய குலச்சிறையார் சிவனடியாரைக் கண்டால் யாதொரு பயனையும் நோக்காது அவர்தம் அடியினில் வீழும் விருப்புடையார். அவர் தூய வெண் ணிறு துதைந்த பொன்மேனியுடையார். நாட்டில் நலம்பல தழைக்க நற்றவம் புரியும் பெற்றியர். நுணங் கிய கேள்வியும் வணங்கிய வாயும் உடைய வாய்மை