பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைச்சர் குலச்சிறையார் 67 மடத்தில் வெந்தழல் பற்றவில்லை. உடனே அரசன் இச்செய்தி அறியின் நம்மை இகழ்வான் என்று எண்ணித் துணியில் பொதிந்த கனலைத் திருமடத்தின் புறத்தே இட்டு வந்தனர். அத் தீச் சிறிதே மடத்தில் பற்றத் தொடங்கியதும் விழித்தெழுந்த அடியவர்கள் அதனைச் சிதைத்து அணைத்தனர். அச் செய்தியைச் சம்பந்தரிடம் சென்று அறிவித்தனர். சம்பந்தர் தீயைப் பணித்தல் அஃதுணர்ந்த சம்பந்தர், ' என் பொருட்டு இச் சமணர்கள் தீங்கு செய்தாராயினும் அடியவர்க்கு அல்லல் விளைந்ததே! இங்கு அரசனது ஆட்சி நெறி தவறிவிட்டது. இத் தீங்கு விளைதற்கு வேந்தனும் இசைந்தே உள்ளான் ; இதனை அவன் உணருமாறு செய்யவேண்டும்' என்று மனத்துள் கொண்டருளி ர்ை. உடனே சைவர் வாழ் மடத்தில் இச் சமணர்கள் இட்ட தீப் பையவே சென்று பாண்டியற்கு ஆவதாக!, என்று நிறைமொழி யருளினர். அதல்ை பாண்டியன் வெப்பு நோய் கண்டு வெந்துயருற்ருன். அவன் வேதனை தாங்காது வெதும்புவது அறிந்து அரசி யாரும் அமைச்சரும் சென்று கண்டனர். சமண அடிகள் மாரெல்லாம் அரசனது நோய் தீர்க்க அரும் பாடு பட்டனர். அவர் தம் செயலெல்லாம் அவனது நோய்த் துன்பத்தை மேன்மேலும் பெருக்கின. அமைச்சர் அறிவுரை இந் நிலையைக் கண்ட குலச்சிறையார், சமணர் கள், சம்பந்தப்பெருமான் உறையும் திருமடத்தில் வைத்த தீயினலேயே தங்களுக்கு இந்த வெப்பு நோய்