பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைச்சர் குலச்சிறையார் 69 றருளினல் எம் உயிரும் அவன் உயிரும் உய்யும்." என்று உரைத்தார். சம்பந்தர் திருவருள் துணை நாடுதல் குலச்சிறையார் கூறிய செய்தியைக் கேட்டருளிய ஞானசம்பந்தர், ஆவதும் அழிவும் எல்லாம் அரன் செயலே ' என்று கூறி, ஆலவாய்த் திருக்கோவிலை அடைந்து சோமசுந்தரப் பெருமான் திருவருளை வேண்டி நின்ருர். அப் பெருமானை வழிபட்டு, வாது செய்யத் திருவுள்ளமே ? என்று வினவி, ஞாலம் நின்புக ழேமிக வேண்டும்தென் ஆல வாயில் உறையும்எம் ஆதியே." என்று பதிகம் பாடித் திருவருள் பெற்று மன்னன் மாளிகையை நோக்கிப் புறப்பட்டார். பாண்டியன் மாளிகையில் சம்பந்தர் சம்பந்தர் வருகையை உணர்ந்த பாண்டியன் அவருக்குத் தன் தலைப்பக்கத்தே பொற்பீடம் அமைக்கு மாறு பணித்தான். அமைச்சரை எதிர்கொண்டு அழைத்து வருமாறு ஏவின்ை. அது கண்ட அமைச் சரும் அரசியாரும் அளவிலா மகிழ்வுற்றனர். அங் கிருந்த சமணர்கள் ஆத்திரம் கொண்டனர்; நம் சமயத்தை நாட்டும் முறைமை இதுதானே என்று மன்னனைக் கேட்டு மனம் கலங்கினர். இச் சமயத்தில் தமிழ்நாடு செய்த தவக் கொழுந் தனைய சிவஞானச் செல்வர், குலச்சிறையார் முன் வர முத்துச்சிவிகையினின்று இ ற ங் கி ப் பாண்டியன் மாளிகையுள் புகுந்தார். காரிருள் நீங்கப் பேரொளி யுடன் வரும் கலைத்திங்களைப்போல் எழுந்தருளிய