பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 இலக்கிய அமைச்சர்கள் திருவாதவூரர் புராணச் சிறப்பு வாதவூரர் வரலாற்றைக் கூறும் நூல்கள் பலவற் றிலும் கடவுண்மாமுனிவர் அருளிய'திருவாத வூரடிகள் புராணம் ஒன்றுமட்டும் அவரது வரலாற்றையே விளக் குதற்கு எழுந்த சிறந்த செந்தமிழ் நூலாகும். இந்நூல் சிறியதொரு நூலாயினும் அரிய பல பண்புகள் கொண்டு இலகுவது. இஃது எளிய இனிய செய்யுள் நடையுடையது. காமச் சுவை கலவாத கற்பனை நலங் கள் கனிந்தொழுகும் பொற்புடையது. சிவஞான போதம், சிவஞானசித்தியார் போன்ற சித்தாந்த சாத்தி ரங்கட்கு இலக்கியமாக மிளிர்வது. திருக்கோயில்களி லும் திருமடங்களிலும் சிறந்த இல்லங்களிலும் ஆண்டு தோறும் மார்கழித் திங்கள் திருவாதிரைவிழாப் பத்து நாட்களிலும் முறையாக ஒதவும் கேட்கவும் பெறும் உயர்வுடையது. முதன் முதலாகச் செய்யுள் நடை பயில முற்படுவாருக்கு ஊக்கமூட்டும் சிறப்புடையது. ஆதலின் தமிழறிஞர்கள், தமிழ் இலக்கியங்களைப் பயில முயலும் இள மாணவர்க்கு இந்நூலையே முதற்கண் கற்குமாறு தூண்டும் முறைமை இன்றும் உண்டு. வாதவூரர் புராணம் கூறும் வரலாறு இத்தகைய பல்வேறு சிறப்புக்களையுடைய திரு வாதவூரடிகள் புராணம் கூறும் வாதவூரர் வரலாற்றை நோக்குவோம். பாண்டி நாடே பழம்பதி யாகவும்' என்று மாணிக்கவாசகரே மகிழ்ந்து போற்றும் பழம் பதியாகிய பாண்டிய நாட்டை வளம்படுத்தும் ஆறு களில் ஒன்று வையையாகும். புனல் யாறு அன்று இது, பூம்புனல் யாறு' என்று போற்றப்பெறும் ஏற்றமுடையது வையையாறு. இவ் வையையாற்றின்