பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 இலக்கிய அமைச்சர்கள் பார்வாய்க் கலைகள் அத்தனையும் கற்றுணர்ந்தார். உற் றது கொண்டு மேல்வந்து உறுபொருள் உணரும் பெற்றியரானுர். இவர்தம் நூலறிவும் நுண்ணறிவும் சீலமும் கோலமும் செயலாற்றும் திறனும் ஆகிய சிறப்பையெல்லாம் அந்நாளில் பாண்டிய நாட்டை யாண்ட மன்னன் அரிமர்த்தனன் என்பான் நல்லார் பலர் வந்து சொல்லக் கேட்டான். உடனே அவரை அழைத்து வருமாறு பணித்து, அமைச்சுரிமை பூணு மாறு செய்தான். அவருடைய ஆட்சித் திறனும் சூழ்ச் சியுரனும் கண்ட மன்னன் அவரை முதலமைச்சராக்கித் " தென்னவன் பிரமராயன் என்ற பட்டமும் அளித் துப் பாராட்டின்ை. வாதவூரரது கோதிலா ஆட்சியின் கொற்றத்தால் பாண்டி நாட்டு அரசியல் அல்லல் இன்றி அமைதியாக நடைபெற்றது. வாதவூரர் அமைச்சுத்திறம் அமைச்சராகிய வாதவூரர் அறம் செய்வார்க்குக் கவசமும் கண்ணும் போல் விளங்கினர். பகைவர்க்குத் துன்பமும் பணிவார்க்கு இன்பமும் விளைத்தார். வறிய வர்க்குத் தாயாக விளங்கித் தண்ணளி செய்தார். அர சன் அரிமர்த்தனன் ஆணையைப் பூமியில் பொதுவற நடத்தினர். காதலித்(து) அறம்செய் வோர்க்குக் கவசமும் கண்ணு மாகி ஏதிலர்க்(கு) இடும்பை யாகி இறைஞ்சினர்க்(கு) இன்ப மாகி ஆதுலர்க்(கு) அன்னே யாகி அரனடிக்(கு) அன்பு மிக்கார் பூத லத்(து) இறைவன் ஆணே பொதுவற நடத்தும் நாளில்.’