பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைச்சர் வாதஆரர் 77 இவ்வாறு வாதவூரர் அமைச்சுத் தொழிலை அழகுற நடத்திய திறத்தைக் கடவுண்மாமுனிவர் கவிதையொன் ருல் குறிப்பிட்டார். ஞாளுசிரிய நாட்டம் பாண்டி நாட்டில் அமைதியான ஆட்சி நிலவுமாறு செய்த வாதவூரர் உலக வாழ்வும், வாழ்விற் கண்ட பெரும்போகமும் நிலையற்றன என்பதை அறிந்தார். அதல்ை,

  • கூத்தினர் தன்மை வேறு

கோலம்வே ருகு மாப்போல் நீத்தனர் மனத்தின் முன்போல் நிகழ்த்தினர் வழுதி நீதி.' என்று குறித்தார் ஆசிரியர். நாடகம் ஆடுவோரின் இயற்கையான தன்மை வேருகவும், அரங்கம் ஏறி ஆடுங்காலத்துக் கொள்ளும் கோலம் வேருகவும் அமை தல் போன்று அமைச்சராகிய வாதவூரரும் அரசியல் பணிகளில் ஈடுபடுங்காலத்து அமைச்சர்க்குரிய தோற்ற ஏற்றங்களில் குறைவின்றித் திகழ்வார். பிற சமயங் களில் துறவு பூண்ட சிவத்தொண்டராய்ப் பிறவி அறு தற்குரிய ஞானநெறியில் சிந்தையைச் செலுத்துவார். அதல்ை நன்னெறி காட்டியருளும் திருவருட் குருவை நாடும் வேட்கை, அவருக்கு நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வந்தது. குதிரைக் காவலர் கூறிய செய்தி ஒரு நாள் அரிமர்த்தன பாண்டியன் அமைச்சர் புடைசூழ அத்தாணியில் அமர்ந்திருந்தான். அப் பொழுது குதிரைப் படைக் காவலர் அரசவைக்கு வந்து