பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 இலக்கிய அமைச்சர்கள் மன்னனைப் பணிந்தனர். அரச்ே! நம் குதிரைப் படை குறைந்து விட்டது. இறந்தன போக, இந்நாள் உள்ளனவாகிய குதிரைகளில் பெரும்பாலன பிணியுற் றனவும் முதுமையுற்றனவுமாய் இருக்கின்றன. குதிரை கொள்ளுதற்குரிய சமயமும் இதுவே என்பதைப் பணி வுடன் தெரிவித்துக் கொள்கிருேம், என்று கூறி அகன்றனர். குதிரை வாங்கப் பணித்தல் குதிரைக் காவலர் கூறிய செய்தியைக் கேட்ட பாண்டியன் முதலமைச்சராகிய வாதவூரரை, ! இப் பொழுதே சென்று குதிரைகள் வாங்கி வருக என்று ஆணையிட்டான். வாதவூரரும் அவ்வாறே நிதிக் கருவூலத்தைத் திறந்து பெரும்பொருளை வாரிக் கொண்டு குதிரை வாங்குதற்குப் புறப்பட்டார். குருபரன் அருட்காட்சி அவர் செல்லும் வழியில் திருப்பெருந் துறையினை அடைந்தார். அங்குச் சிவநாம முழக்கம் அவர் செவி வழியே புகுந்து சிந்தையை உருக்கிற்று. ஒலி வந்த வழி நோக்கி விரைந்து சென்ருர், திருப்பெருந் துறைத் திருக்கோவில் சுற்றுவெளியில் குருந்த மரத் தடியில் குருவடிவாக எழுந்தருளிய பெருமானைக் கண் டார். பூதகணங்களே சீடர்களாகப் புடை சூழ்ந்திருக்க, ஆங்கு அமர்ந்திருந்த அருளாசிரியரைக் கண்ணுற்ருர். அவரைக் கண்ட வாதவூரர் உள்ளம் காந்தம் கண்ட இரும்பைப் போல் அவர்பால் இழுப்புண்டது. அவரை அணுகிய வாதவூரர் அடியற்ற மரம்போல் அவர் கழ லில் விழுந்து பணிந்தார். ‘அடியேன ஆட்கொண்