பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 இலக்கிய அமைச்சர்கள் புகுந்து ஆங்கு எழுந்தருளிய பெருமானிடம் முறையிட் டார். இறைவன் விலை மதிக்க முடியாத மாணிக்கம் ஒன்றைக் கையுறையாகத் தந்து, ஆவணி மூல நாளில் குதிரைகள் வரும் என்ற செய்தியைக் கூறி, அம் மணியினையும் அரசன்பால் அளிக்குமாறு ஆணையிட் டருளினர். வாதவூரருக்குச் சிறைத்தண்டனை இறைவன் அருளாணை பெற்ற அமைச்சர் மதுரை மாநகர் அடைந்து மன்னனைக் கண்டு மணியை நல்கி ஞர்; ஆவணி மூல நாளில் குதிரைகள் அனைத்தும் வந்து சேரும் என்று அறிவித்தார். அமைச்சரது மொழியைக் கேட்டு ஒருவாறு உளம் தேறிக் குதிரை களை எதிர்நோக்கி இருந்தான் அரசன். ஒற்றர்கள் வாயிலாக அமைச்சர் கூறிய செய்தி பொய்யென்று உணர்ந்தான். உடனே வாதவூரரைச் சிறையில் இருத் திப் பலவாறு ஒறுத்தான். அவர் தம் செயலற்று எல் லாம் இறைவன் செயலாகக் கண்டு இறை நினைவி லேயே மூழ்கி யிருந்தார். - நரி பரியாக்கல் பின்னர், இறைவன் அவர் பொருட்டுக் காட்டி லுள்ள நரிகளையெல்லாம் பரிகளாக்கிப் பாண்டிய மன்னனிடம் ஒப்புவித்து மீண்டார். அன்றிரவே அப் பரிகள் எல்லாம் நரிகளாக மாறி, இலாயத்தில் நின்ற பிற குதிரைகளையும் கொன்று காட்டிற்கு ஓட்டம்பிடித் தன. இதனை அறிந்த பாண்டியன் மேலும் சினம் மூண்டவய்ை அமைச்சராகிய வாதவூரரை வையை யாற்றுச் சுடுமணலில் நிறுத்துமாறு பணித்தான். தலை