பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 இலக்கிய அமைச்சர்கள் சிலர் தில்லைவாழ் அந்தணர்களோடு வாதுக்கு வந்த னர். அவர்களை இறைவன் ஆணையின் வண்ணம் எதிர்த்து வாது செய்து வென்ருர். அவர்களுடன் வந்திருந்த இலங்கை மன்னன் மகளாகிய ஊமைப் பெண்ணைப் பேசுவித்துச் சிவனருள் திறத்தை நிலை நிறுத்தினர். * இறைவன் ஏடு எழுதல் தில்லையில் வாதவூரர் வாழ்ந்து வருங்கால் ஒரு நாள் இறைவன் அவர்பால் அந்தண வடிவுடன் வந்து அவர் பாடிய திருவாசகத்தைச் சொல்லுமாறு வேண்டி ஞர். அவ்வாறே வாதவூரரும் மனமுவந்து பாடிக் கொண்டிருக்க அவர் பாடல்களையெல்லாம் தம் கரத் தாலேயே எழுத்தாணி பிடித்து ஏட்டில் எழுதியருளி ஞர். பின்னர், இறைவனே திருக்கோவையார் என் னும் நூலையும் வாதவூரரைப் பாடுமாறு செய்து அந் நூல் பாடல்களையும் தாமே எழுதியருளினர். இங்ங்னம் திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் எழுதியரு ளிய இறைவன் இறுதியில் தமது கைச்சாத்திட்டுத் திருவம்பலப்படியில் வைத்து மறைந்தருளினர். வாதவூரர் ஒளியில் கலத்தல் மறுநாள் திருவனந்தலில் ஏட்டைக் கண்ட தில்லை வாழ் அந்தணர்கள் பெரிதும் வியந்து அதனை அவிழ்த்து நோக்கினர். அதில் திருச்சிற்றம்பல முடையார் கைச்சாத்திருப்பதைக் கண்டு வாதவூரரை அணுகி நிகழ்ந்த உண்மையை உணர்ந்தனர். அந் நூல்களுக்குப் பொருள் விரிக்குமாறு அவரைப் பணி வுடன் வேண்டினர். வாதவூரர் அம்பலக்கூத்தன் திருமுன்பு சார்ந்து, அனைத்திற்கும் பொருள் அம்பல