பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைச்சர் வாதஆரர் 88 வாணன் அடியிணையே என்று கூறி, ஆங்குத் தோன் றிய பேரொளியில் இரண்டறக் கலந்தார். திருப்பெருந்துறைப் புராணத்தில் வாதவூரர் திருப்பெருந்துறைப் புராணம் வாதவூரர் வர லாற்றை ஆறு படலங்களால் அறிவிக்கின்றது. இந் நூலில் வாதவூரரின் தந்தையார் சம்புபாதாசிருதர் என்றும், தாயார் சிவஞானவதியார் என்றும் கூறப்பெற் றுள்ளது. அவர்கள் இருவரும் பரசமயக் குறும்பொழிக் கும் ஒரு மகவு வேண்டுமெனத் தவங் கிடந்தனர் என் றும், அதன் பயனுக வாதவூரர் நந்தியின் அவதாரமா கத் தோன்றியருளினர் என்றும், திருவாதவூரர் என் னும்பிள்ளைத் திருநாமம் சூட்டப்பெற்றனர் என்றும் அந்நூல் அறிவிக்கின்றது. வாதவூரர் வந்த மரபு திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் வாதவூரரை ஆமாத்தியர் மரபினர் என்றும், பரஞ் சோதியார் திருவிளையாடலும் திருவாதவூரடிகள் புராண மும் அமாத்தியப் பிராமண மரபினர் என்றும் குறிப்பிடு கின்றன. பண்டிதமணி கதிரேசச் செட்டியாரவர்கள் தாம் வரைந்துள்ள திருச்சதகம் கதிர்மணி விளக்கம் முன்னுரையில் வாதவூரர் ஆதிசைவ அந்தண மரபினர் என்று கூறுகின்றனர். பிராமணராயிருந்து மந்திரிப் பதவியைத் தாங்கியமையால் இவரும் இவர் குலத்தின ரும் அமாத்தியப் பிராமணர் என்று அழைக்கப் பெற்ற னர். நேபாளத்துக்கு அருகில் அமாத்திய தேசம் என்ற சிறு நாடு ஒன்று உண்டு. அத் தேசத்தைச் சார்ந்த பிராமணரை அமாத்தியப் பிராமணர் என்று கூறலாம். விசய நகரத்திற்குப் பக்கத்தில் உள்ள ஓர்