பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைச்சர் வாதவூார் 85 உள்ளத்தால், தம் அருளநுபவத்தைத் திருவாசகப் பாக்களின் வாயிலாகப் புலப்படுத்தியுள்ளார். திருவாச கப் பாக்கள், மாணிக்கவாசகப் பெருமானின் சிவாநுபவ நிறைவில் பொங்கித் ததும்பி வெளிப்போந்த அருளமு தப் பெரு வெள்ளமாகும். ' என்புருகி நெஞ்சம் இளகிக் கரைந்துகரைக்(து) அன்புருவாய் கிற்க அலேங்தேன் பராபரமே." என்று பாடினர் தாயுமானர். இவ் அடிகளுக்கு ஓர் இலக்கியமாய் அ ன் பே வடிவாய் விளங்கியவர் மாணிக்கவாசகர். அவரது அன்பு நெறியை வியந்து அத் தாயுமானுரே, வாதவூர் ஐயன் அன்பை வாஞ்சிப் பது எந்நாளோ ? என்றும் இயம்பினர். மகளிர் ஆடலும் மாணிக்கவாசகரும் இங்ங்னம் அன்பு வடிவாய் அருள்நெறியில் தலைப் பட்ட மாணிக்கவாசகர் பேரின்ப நிலையில் தாம் அனுப வித்த உண்மைகளையெல்லாம் அறிவிற் சிறியாரும் அறிந்து இன்புறும் வண்ணம் இசையினிமை மிக்க இன்தமிழ்ப் பாடல்களாக வெளிப்படுத்திய முறை வியத்தற்குரியதாகும். அம்மானை, பொற்சுண்ணம், உந்தி, சாழல், தெள்ளேணம், ஊசல் முதலிய மகளிர் விளையாட்டுக்களில் அவர் தம்முள் உரையாடும் முகமாக அரிய அனுபவ உண்மைகளை எளிய முறையில் தெளிவுபடுத்தியுள்ளார். இச் செயல் அவர் மக்கள் பால் கொண்ட பெருங் கருணைக்குத் தக்க சான்ருகும். குயிலை முன்னிலைப் படுத்தி இறைவன் அருட்குணங் களை இவ்வாறு கூவுக என்றும், வண்டுகளை நோக்கி * நீவிர் இறைவன் பாத கமலங்களில் சென்று ஊதுக, என்றும் அருளிய திருவாசகப் பாடல்களை நோக்குங்