பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 இலக்கிய அமைச்சர்கள் கால் ஓசையொலியெல்லாம் கடவுள் மயமாகக் கண் டார் என்பது புலனுகும். திருவாசகத்தில் ஒருவாசகம் இத்தகைய திருவாசகத்தில் ஒரு வாசகத்தை நோக்குவோம். திருவாசகத்தில் திருக்கோத்தும்பி என்ருெரு பதிகம் உண்டு. தும்பி என்பது வண்டு; கோத்தும்பி என்பது அரசவண்டைக் குறிக்கும் பெயர். வண்டுகளுள்ளே சிறந்த இனத்தைச் சேர்ந்த வண் டைக் கோத்தும்பி என்று கூறுவர். அத்தகைய அரச வண்டை அழைத்து மாணிக்கவாசகர் அரியதோர் அறிவுரை வழங்கினர். வண்டே! நீ கண்ட கண்ட மலர்களில் எல்லாம் சென்று வாய்வலிக்க ஊதுகின் றனையே. அதனல் என்ன பயனைக் கண்டாய்? தினை யளவு தேனை அளிக்கும் அப் பூக்களில் சென்று ஊது வதை ஒழிவாய். தில்லைக்கூத்தன் திருவடித் தாமரை மலர்களில் சென்று நன்ருக இன்னிசையுடன் ஊதுக. அவ்வாறு ஊதினுல் நீ அடையும் இன்பத்தை என் னென்பேன்! அப் பெருமான் திருவடித்தாமரை மல ரில் பொங்கித் ததும்பி வழியும் ஆனந்தத்தேன் நினைக் குந்தோறும் இனிக்கும்; காணுந்தோறும் பேசுந் தோறும் எப்போதும் உடம்பிலுள்ள எலும்புகள் எல் லாம் நெக்கு நெக்குருகுமாறு மிக்க இன்பத்தை விளைக் கும். இவ்வாறு வண்டிற்கு நல்லுரை வழங்குவாரைப் போல வையத்து மக்களுக்கு மெய்யுரை வழங்கிய அவ ரது மேதகவை என்னென்பது! சிற்றின்பத்தில் மூழ் கிச் சீரழியும் பாருலக மக்கட்குப் பேரின்பந்தரும் இறை வன் அருள்தேனைப் பருக முயலுமாறு தூண்டும் மதி யமைச்சரின் அறிவுத் திறம் வியக்கற் பாலதாகும்.