பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைச்சர் வாதவூரர் 87. மற்ருெரு வாசகத்தின் மாண்பு மற்ருெரு வாசகத்தையும் நோக்கி மகிழ்வோம். ஆவின் பாலை நன்ருகக் கழுவிய கலத்தில் பெய்து வைத்தால் அது பாழாகாது பக்குவமாக இருக்கும். அதனைக் கழுவப்பெருத கலத்தில் பெய்து வைத் தாலோ அதன் சுவை கெட்டு வீணுகும். ஆதலின் கலத்தைத் தக்க கருவி கொண்டு அழுக்கை ஒழித்துத் தூய்மைப்படுத்திய பின்னரே ஆவின் பாலை அதன்கட் பெய்து வைத்தல் வேண்டும். இஃது உலகியலிற். காண்பது. இறைவன் அருளாரமுதை மாணிக்கவாசகரின் உள்ளமாகிய கொள்கலத்தில் பெய்து வைக்கத் திருவு ளங் கொண்டார். அவரது உள்ளத்தில் நீண்டகால மாக நிறைத்து வைத்த துன்பங்களை அறவே ஒழித் தார். பின் மயக்க வடிவாகப் படிந்து கிடந்த இருளைத் தம் அருட்பார்வைப் பேரொளியால் போக்கினர். பேரின்ப மயமாகிய அருளமுதைப் பெய்து இன்பமூட் டிஞர். அந் நிலையில் மாணிக்கவாசகரின் உள்ள முழு தும் அன்பு மயமாக மாறிற்று. அவ் அன்பு ஆசனத்தில் இறைவன் வீற்றிருந்தருளினர். இவ் உண்மை புல குைமாறு, சோதியாய் நின்று இருளகற்றித், துன் பம் தொடர்வறுத்து, இன்பம் பெருக்கி, அன்பமைத்து என்னுடைய சிந்தையே ஊராகக் கொண்டான்,' என்று அழகு பொருந்தத் திருவாய் மலர்ந்தருளினர். 'இன்பம் பெருக்கி இருளகற்றி எஞ்ஞான்றும் துன்பம் தொடர்வறுத்துச் சோதியாய்-அன்பமைத்துச் சீரார் பெருந்துறையான் என்னுடைய சிங்தையே ஊராகக் கொண்டான் உவந்து.' என்பது திருவாசகம்.