பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 இலக்கிய அமைச்சர்கள் திருவாசகம் என்னும் தேன் இத்தகைய திருவாசகத்தைப் பலகால் ஒதி, அதன் சுவையில் ஆழ்ந்த பெரியார் ஒருவர் திருவாசகம் என்னும் தேன்,' என்று பாராட்டினர். தேன் உண் பாருடைய நெஞ்சிற்கு விஞ்சிய வலியூட்டும். குரல் இனிமையை உண்டாக்கும். மிகுதியாக உண்டார்க்கு மலம் கழிக்கும்; பித்தம் தணிக்கும் ; பிணி தீர்க்கும். அதுபோலத் திருவாசகத் தேன் உயிருக்கு மெய்ஞ் ஞான உணர்வாகிய வலியை ஊட்டும். சேயின் குரல் போல இனிமையாக்கி, இறைவனுகிய தாய்க்கு அருளை மிகுவிக்கும்; உயிர்கள் எல்லாவற்றிற்கும் இனியராக் கும். பெரிதும் தோய்ந்தால் பிறவித் தளையாகிய மூல மலத்தை அறுத்தொழிக்கும். பிறவி நோயைத் தீர்க் கும். ஆதலால் திருவாசகம் என்னும் தேன் அல்லல் அறுத்து ஆனந்தமாக்கியது என்று சிறப்பித்தார். திருவாசகமும் சிவப்பிரகாசரும் தவப்பெருஞ் செல்வராகிய சிவப்பிரகாசர் வேதத் திற்கும் திருவாசகத்திற்கும் உள்ள வேற்றுமையை விளக்குகின்ருர். வேதம் ஓதில்ை விழிநீர் பெருக்கி, நெஞ்சம் நெக்குருகி நிற்பவரைக் காண்கின்ருேமில்லை. திருவாசகத்தை ஒருகால் ஒதிலுைம் கருங்கல் மனமும் கரைந்து உருகுகின்றது ; கண்களில் மணற்கேணியிற் போல நீர் சுரக்கின்றது; உடம்பு மயிர்க்கூச்செறிகின் றது; உள்ளமும் உடம்பும் ஒருங்கே நடுங்குகின்றன; அன்புருவாய் ஆகிவிடுகின்றனர் என்று விளக்கினர். திருவாசகமும் அருட்பிரகாசரும் கற்பவர் உள்ளமெல்லாம் கனிவிக்கும் கவிமழை பொழிந்த அருட்பிரகாச வள்ளலார் திருவாசகத்தைத்