பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைச்சர் வாதவூார் 89 தமது உபாசனமூர்த்தமாகக் கொண்டு உளங்கலந்து பாடிப்பாடி இன்புற்றவர். அதேைலயே அவருடைய பாடல்கள் முழுவதும் திருவாசகம் போல மனம் கரைக்கும் மாண்புடையவாயின. திருவாசகம் அவ ருக்கு அளித்த இன்பத்தை ஒரு பாடலில் தெளிவாக அறிவிக்கின்ருர். 'நான் திருவாசகத்தை உளங்கலந்து ஒதும்போதெல்லாம் அது தேன், பால், தீங்கனி, தித் திக்கும் கருப்பஞ்சாறு எல்லாம் கலந்து உண்டாற் போல ஊனினும் உயிரினும் கலந்து உவட்டாமல் இனிக்கின்றது, என்று குறிக்கின்ருர். மேலும் திரு வாசகம் ஒதக் கேட்ட கீழ்ப்பறவைச் சாதிகளும் வேட்டையாடுதற்குரிய காட்டு விலங்குகளும் மெய்ஞ் ஞான நாட்டத்தை மேவும் என்று கூறுகின்ருர். திருவாசகமும் சுந்தரம்பிள்ளையும் பேராசிரியர் சுந்தரம்பிள்ளையவர்கள் திருவாசகத் தின் பெருமையைத் தமது மனேன்மணியத்தில் பேசு கின்றனர். அம்பலத்தாடும் ஈசன், எல்லாம் அழிந் தொழியும் கடையூழிக் காலத்தில் தமக்கு வரும் தனிமையை இனிமையாகக் கழித்துக் கொள்ளுதற் பொருட்டே திருவாசகத்தில் ஒரு பிரதியைத் தாமே எழுதிவைத்துக் கொண்டார் ; மனத்தைக் கரைத்து மலத்தைக் கெடுக்கும் திருவாசகத்தை ஓதி இன்பம் கண்டவர்கள் சடைமுடி தரித்துக் காடு புகுந்து கண் மூடியிருந்து கதறமாட்டார்கள் என்று திருவாசகத்தின் பெருமையை விளக்கினர். திருவாசகமும் போப்பையரும் புறச்சமயத் தலைவராய்த் தமிழ்நாடு புகுந்த ஜி. யூ.போப்பையர் இந்நூலைப் பாராட்டும் முறை மிகச்