பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

991 ' இந்நாயனார்க்கு நாச்சியார்க்கும் பூசைசெ...... பண்ணுவது 11-பன்மகேசுரரெக்ஷெ'-1 என்பதாம். ஈண்டு எடுத்துக் காட்டப் பெற்ற மூன்று செய்திக ளாலும் பண்டைத் தமிழ்வேந்தர் தாம் வென்ற நாடுகளி விருந்து தம் வெற்றிக் கறிகுறியாகக் கடவுட் படிமங்கள் கொண்டு வந்து எழுந்தருளுவித்தமை வெளியா தல் காண்க, எனவே, சிறுத்தொண்ட நாயனாரும் தாம் வென்ற மேலைச் சாளுக்கியர் தலை நகராகிய வாதாபியிலிருந்து சில விநாயகர் படிமங்கள் கொண்டுவந்து நம் தமிழகத்தி லுள்ள சிவலாயங்களில் எழுந்தருளுவித்து நாள் வழிபாட் டிற்கு நிபந்தங்களும் விட்டிருத்தல் வேண்டுமென்பது தன்கு துணியப்படும். அன்றியும், நாயனார் தம் காலத் திலேயே அவ்வழிபாட்டைப் பரப்பு வேண்டுமென்று முயன்றிருத்தல் இயல்பேயாம். ஒவ்வோர் ஊரிலுமுள்ள பல தெருக்களிலும் ஆற்றங்கரைகளிலும், குளக்கரை களிலும் பெருவழிகளிலும் விநாயகராலயம் அமைக்கப் பெற்றிருப்பது அப்பு திய கடவுள் வழிபாட்டை யாண்டும் பரவச் செய்தற்குக் கையாண்ட முறையேயாகும், பிற்காலச் சைவ நூற்களிலும் பிறவற்றிலும் முதலில் விநாயகர் வணக்கம் அமைந்திருப்பது யாவருமறித்ததே. விநாயகர் வணக்கத்தை முதலில் கொண்டுள்ள நூற்கள் பலவற்றுள்ளும் மிகத்தொன்மை வாய்ந்தவை புறப் பொருள் வெண்பா மாலை, நந்திக்கலம்பகம் என்பனவே யாம். இவற்றிற்கு முந்திய காலத்தியவான தேவாரத் இக்கல்வெட்டு, சீகாழியிலுள்ள தமிழ்ப்பேராசிரியரும், தருமபுர ஆதீள வித்துவா மாகிய திருவாளர் ப. து. நத்துத் காண்டவராயப்பின்கா அவர்கள் வெளியிட்டுள்ள 'காக் கல் வெட்டுக்கள்' என்னும் புத்தகத்தில் உள்ள தாகும்.