பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

102 யில் தொகுக்கப்பெற்ற புறநானூற்றிலுள்ள பாடல் ! களும் சி. பி. இரண்டாம் நூற்றாண்டிற்கு முன்னர் இயற்றப் பெற்றவை என்பதில் ஐயமில்லை. இத்துணைத் தொன்மை வாய்ந்த இவ்வரிய நூல் நம் முன்னோர் வரலாறுகளையும் வழக்க ஒழுக்கங்களையும் நம்மறோர்க்கு நன்குணர்த்தும் ஒப்பற்ற கருவூலமாக அமைந்திருப்பது பெறற்கரும்பேறேயாம். பண்டைக்காலத்தில் இத் தமிழகத்தில் செங்கோ லோச்சிய சேர சோழ பாண்டியராகிய முடியுடை வேந்தர்கள், குறுநில மன்னர்கள், அமைச்சர், படைத் தலவர், கடையெழு வள்ளல்கள், சங்கப் புலவர்கள் முதலானோர் வரலாறுகளையும், பண்டைத் தமிழ் மக்க ளுடைய கொள்கை , நாகரிகம், கல்வி, வீரம் முதலான வற்றையும் உணர்ந்து கொள்வதற்குப் புறநானூறு என்னும் இச் சீரிய தூல் ஒன்றே போதும் எனலாம். உண்மைத் தமிழராகவுள்ள ஒவ்வொருவரும் இந்நூல் ஒன்றையாவது கற்றல் வேண்டும் என்பது எனது வேண்டுகோள். இனி, கல்வெட்டுக்கள் என்பன, கோயிற் சுவர்கள், கற்பாறைகள், மலைக்குகைகள், வெற்றித் தூண்கள், மண்டபங்கள், படிமங்கள், நடுகற்கள் முதலானவற்றில் வரையப்பெற்றிருக்கும் கல்லெழுத்துக்களேயாம். செப் பேடுகள் எல்லாம் கல்வெட்டுக்களின் படிகளேயாதலின் அவற்றையும் கல்வெட்டுக்கள் என்ற தயேப்பின் கீழ் ஈண்டு அடக்கிக் கொள்வது பொருந்தும். நம் தமிழ் நாட்டுக் கல்வெட்டுக்கள் எல்லாம் நம் தாய்மொழியாகிய தமிழ் மொழியிலேயே உள்ளன. சிற்சில வடமொழிக் கல்வெட்டுக்களும் நம் நாட்டில் உண்டு. கல்வெட்டுக்