பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

103 களில் காணப்படுஞ் செய்திகள் எல்லாம் வெறும் கற்பனைச் செய்திகள் அல்ல, பயனற்ற செய்திகளும் அல்ல. அவையனைத்தும் நம் முன்னோர்களுடைய உண்மை வர லாறுகளை யுணர்த்தும் பழைய வெளியீடுகளே. சோ சோழ பாண்டியராகிய முடியுடைத் தமிழ் வேந்தரும், பல்லவரும், தது நில மன்னரும், பிற தலைவர்களும் புரிந்த அறச் செயல்களும், வீரச் செயல்களும், அன்னோர் செய்து கொண்ட உடன்படிக்கைகளும், அக்கால அரசியல் முறைகளும், போர் நிகழ்ச்சிகளும் பழைய புலவர்களைப் பற்றிய செய்திகளும், மண்டலம், வார நாடு, கோட்டம், நாடு, கூற்றம் என்பவற்றின் வரலாறுகளும், பல ஊர் களின் உண்மைப் பெயர்களும், முற்கால வழக்கங்களும், சமய நிலையும், மற்றும் பல அரிய நிகழ்ச்சிகளும் நாம் நாட்டுக் கல்வெட்டுக்களாலும் செப்பேடுகளசலும் நன் கறியக் கிடக்கின்றன. சுருங்கச் சொல்லுமிடத்து, தம் நாட்டின் பழைய சரிதங்களை உள்ளவாறு உணர்ந்து ' கொள்வதற்குத் தக்க கருவிகளாயிருப்பா, கல்வெட்டுக் களும் செப்பேடுகளுமேயாம். ஆகவே, புறநானூறும் கல்வெட்டுக்களும் உணர்த்துவன, நம் தமிழகத்தின் பண்டை வரலாறுகளே என்பது இனிது விளங்குதல் காண்க. இவற்றுள், புறநானூறு, கி. பி. இரண்டாம் தூத் முண்டிற்கு முன்னர் திகழ்ந்த வரலாறுகபோயே கூறும். நம் தமிழ் நாட்டுக் கல்வொட்டுக்களோ கி. பி. ஆனாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவை. எனவே, புறநா தூறும் கல்வெட்டுக்களும் தம்முள் எங்கனம் இயைபுடையன வதால் கூடும் என்ற ஐயப்பாடு எவர்க்கும் நிகழ்தல் இயல்பே. ஆதலால், இதுபற்றிச் சில கூறி விளக்காரிகள்..