பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

105) செப்பேடுகள் 1 , திருவாலங்காட்டுச் செப்பேடுகள்' , கன் னியாகுமரிக் கல்வெட்டுக்கள் 3 என்பவற்றில் மிகச் சிறப் புடன் குறிக்கப்பட்டுள்ளனர். 2. காரிகிழார், நெட்டிமையார், நெடும்பல்லியத்த னார் என்ற புலவர் பெருமக்களால் புறநானூற்றில் பாடப் பெற்றவனும், பல பகைஞர்களையும் வென்று மருக்கள் வேள்விகள் புரிந்தவனும், வேண்டிய வேண்டியாங்கு புலவர் களுக்கும் இரவலர்களுக்கும் ஈந்த பெருங்கொடை வள்ளலும், சிவபெருமானிடத்தில் பெரிதும் ஈடுபாடுடைய வனுமாகிய பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்பான், கி. பி. எட்டாம் நூற்றண்டில் வரையப்பெற்ற வேள்விக்குடிச் செப்பேடுகளில், கொல்யானை பலவோட்டிக் கூடாமன்னர் குழாத் தவிர்த்த பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி யெனும் பாண்டியாதிராசன்" என்று பாராட்டப்பட்டிருப்பது உணரற்பாலது. 3. இம் முதுகுடுமி 'அரசர்க்குரிய ப்ல வேள்விகள் செய்து சிறப்புற்றவன் என்பது, இவன் இயற்பெயருக்கு முன்னருள். பேல்பாகசாவே' என்ற அடை மொழி களாலும், "அருஞ் சீர்த்திப் பெருங் கன்றுதை - நெய்ம்மலி யாவுதி பொங்கப் பள் மாண் - வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி பூபதட்ட யேன் களம் பலகோல்" 1 Epigraphia Indice Vol. XXII, No. 34. 2. South Indian Inscriptions Vol. THI. No. 2015 5 Travancore Archaelogical Series Vol. Ill Ins. No. 34. ஓ-ஆ 7