பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பெருமாள் நாயனார் என்று வழங்கும் கழறிற்றறிவார் காலத்தில் பாண்டி நாட்டில் அரசு புரிந்தவன் வரகுணபாண்டியன் என்பதும், கழறிற்றறிவார்க்குப் பெரு நட்பினராகிய சுந்தரமூர்த்திகளும் அப்பாண்டியன் காலத்தவரேயா தல் வேண்டும் என்பதும் அவர்கள் கூறும் கருவிகளுள் முதன்மையானவைகளாம். கழறிற் றறிவார் சுந்தரமூர்த்திகளுக்கு நட்பினராகவிருந்து அவருடன் திருக்கைலை சென்றவர் என்பது பெரியபுரா ணத்தால் அறியக்கிடக்கும் உண்மையாதலின், அதிற் சிறிதும் ஐயமில்லை, ஆனால், கழறிற்றறிவார் காலத் தில் மதுரைமா நகரில் வாழ்ந்த பாண்டியமன்னன் வரகுணன் ஆவன் என்று அன்ஞோர் கூறுவது தக்க வலி படைத்தன்று, பெரிய புராணத்தின் ஆசிரியராகிய சேக் கிழார், சுந்தர மூர்த்திகளும் கழறிற்றறிவாரும் பாண்டி நாட்டில் உள்ள திருக்கோயில்களை வணங்குதற்கு மது ரைக்குச் சென்றிருந்தபோது பாண்டிய அரசனும் அவ னது மகளை மணத்து அங்குத் தங்கியிருந்த சோழ மன்னன் ஒருவனும் அவ்விரு பெரியாரையும் வரவேற்றுத் திருக்கோயிலுக்கு அழைத்துப்போயினர் என்று கூறி யுள்ளார். ஆனால், அந்நாளில் ஆட்சிபுரிந்துவந்த பாண்டிமன்னன் இன்னவன் என்னுதல், அங்கிருந்த சோ முன் இன்னவன் என்றுதல் அவ்வடிகள் வெளிப் படையாகக் கூறிச்சென்சாரில்லை. எனவே, புலவர் பெருமாளுகிய சேக்கிழாருக்கு அன்னோர் யாவர் என்று * தெள்ளவர்கோன் மகளாரைத் திருவேட்டு மூன்னரே தொன்மதுரை நகரின்கண் இனிதிருந்த சோழனார் அன்ளவர்க ளுடன் கூட வளைய அவ குங்கூடி மன்னுதிரு ஆலவாய் மணிக்கோயில் வந்தடைந்தார். பெரியபுராணம், கழறிற்றறிவரர், 92.