பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

109) வட ஆர்க்காடு கோட்டத் (சில்லாவில் போரூருக் கணித்தாகவுள்ள) திருமலையில் காணப்படும் கல்வெட் டொன்று - அதியமான் நெடுமானஞ்சியைக் குறிப்பிடு கின்றது.. செய்யுள் வடிவத்தில் உள்ள அக்கல்வெட்டு, வஞ்சியர் குலயதி யெழினி வகுத்த வியக்க ரியக்கியரோ டெஞ்சியவழிவு திருத்தி பெண்குண விறைவளை மலவைத்தான் அஞ்சிதன் வழிவருமவள் முத விகலதிகன வான நூல்(?) விஞ்சையர் தகைமையர் காவலன் விடுகாதழகிய பெருமாளே" என்பது. இதில் புறநானூற்றில் வந்துள்ள எழினி, அஞ்சி என்ற அரசர் பெயர்கள் பயின்று வருவதோடு அன்னோர் வஞ்சியர் குலபதி என்று குறிப்பிடப்பட்டிருப்பதும் அறியற் பாலதாகும். இதில் கூறப்படும் விடுகாதழகிய பெருமாள் என்பவன் அதியமான் நெடுமானஞ்சிபின் வழித்தோன்றல் என்பதும் சி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டிலிருந்த ஒரு குறு நில மன்னன் - என்பதும் ஈண்டு உணரத்தக்கன. வஞ்சியர் ரூபதி என்பதும். வஞ்சி மாநகரத்தில் வீற்றிருந்து அரசாண்ட சேரமன்னணக் குறிக்கும் தொடராகும். 8. 'அமரர்ப் பேணியும் ஆவுதி யருத்தியும்' என்று தொடங்கும் 99-ஆம் புறப்பாட்டில் அதியமான் நெடு மானஞ்சிக்குரிய அடையால மாலையாகப் பனத்தரர் கூறப்பட்டுளது. அப்பாடலின் விசேடவுரையில் இவனுக் குப் பனந்தார் கூறியது உதிய வேந்தா தலின்' என்று