பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

113 வன்கரை பொருது வகுபுணற் பெண்ணைத் தென்கரை யுள்ளது நீர்த்தத் துறையது மொய்வைத் தியலு முத்தமிழ் நான்மைத் தெய்வக் கவிதைச் செஞ்சொற் கபிலன் மூரிவண் டடக்கைப் பாரிதன் எடைக்கலப் பெண்ணை மலையற் குதவிப் பெண்ணை அலைபுன லழுவத் தந்தரிட் சஞ்செல மினல்புகும் விசும்பின் வீடுபேறெண்ணிக் கனல்புகுங் கடவக் கல்லது புனல்வனர் . பேசெட்டான வீரட்டானம் அனைத்தினு மநாதி யானது' இதனால் முத்தமிழ்ப் புலவராகிய கபிலர், பாரிமகளிருள் ஒரு பெண்ணைத் திருக்கோ வலூர் மலைமானுக்கு மணஞ் செய்து கொடுத்தனர் என்பதும் பிறகு அந்நகரில் பெண்ணை யாற்றங்கரையில் தீப்பாய்ந்து உயிர் துறத் தனர் என்பதும் அவரை நினைவு கூர் தற்கு அங்கு ஒரு கல் தடப்பெற்றது என்பதும் அது 'கபிலக்கல்' என்று வழங்கப்பட்டு வந்தது என்பதும் நன்கு வெளியாதல் காண்க. கடைச்சங்க நாளில் நிகழ்ந்த இவ்வரலாறு கி. பி, பதினொன்றாம் நூற்றாண்டில் பொறிக்கப்பெற்ற கல்வெட் டொன்றில் இவ்வாறு குறிக்கப்பட்டிருப்பது அறியற்பால தாகும். கபிலர், பாரிமகளிர் இருவருள் ஒரு பெண்ணே மலையமானுக்குத் தாமே வாழ்க்கைப்படுத்திய பிறகு மற்றொரு பெண்ணைத் தமக்கு வேண்டிய பார்ப்பாரது பாதுகாவலில் வைத்துவிட்டு உயிர் துறந்திருத்தல் வேண்டும் என்பது புறநானூற்றையும் இக்கல்வெட்டையுங் கொண்டு உய்த்துணரப்படுகின்றது, புறநானூற்றுச் செய்திகளும், கல்வெட்டுக்களாலும்