பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

  • 115

என்ற புறப்பாட்டில் இந்நாடு கூறப்படுகின்றது. திரு மெய்யந் தாலுகாவிலுள்ள ஒலியமங்கலம் என்ற ஊர் முற்காலத்தில் ஒல்லையூர் மங்கலம் என்ற பெயருடையதா யிருந்தது என்பது அவ்வூரிலுன்ன வரகுணீசுவரர் கோயில் கல்வெட்டால் தெரிகிறது ; அக்கல்வெட்டு, "கோனாடான கடலடையா திலங்கைகொண்ட சோழ வள நாட்டு ஒல்ல பூர்க் கூற்றத்து - ஒல்லையூர் மங்கலத்து உடையார் வாகுணீசுவர முடைய நாயனார் கோயில்" என்று கூறு கின்றது. எனவே, ஒல்லயூர் மங்கலத்தைத் தலை நகராகக் கொண்டது ஒல்லையூர்க் கூற்றமாகும். இக் கூற்றமே சங்கநாளில் ஒல்லையூர் நாடென்று வழங்கிய தாகும். கோனாட்டிலிருந்த இஷ்வுள் நாடு திருமெய்யத் தாதுகாவில் உளது. - 3, பறம்பு நாடு:- இது வேள்பாரி அரசாண்ட நாடு. 'முந்நூர் நூர்த்தே தண்பறம்பு நன்னாடு' என்ற புறப் பாட்டடியொன்னால் இது முன்னூறு ஊர்களைத் தன்ன கத்துக் கொண்ட நாடு என்று தெரிகிறது. இது, தென் பறம்பு நாடு, வடபறம்பு நாடு என்ற இரு பிரிவுகளை யுடையதாக அந்நாளில் இருந்தது என்பது கல்வெட்டுக் களால் புலப்படுகிறது. இதன் தலை நகர், பறம்பு எனப் படும். இது இந்நாளில் பிரான்மலை என்று வழங்கு . கின்றது. இதன் பழைய பெயர் கொடுங்குன்றம் என்பது. பறம்பு என்னும் மொழி, மலை என்று பொருள் படுதலால் பிற்காலத்தில் பறம்புநாடு திருமலை நாடு எனவும் வழங்கப் பெற்றுளது. இதனைத் 'திருமயே நாட்டுத் திருக்கொடுங் 1, Tuscriptions of the Pudukottai State, No. 845. ' * 2. புறம் 110. 3. South Indian inscriptions Vol. VIII, No. 423; Ns, No. 17of1931-32.