பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கோட்டை இராச்சியத்தில் திருமெய்யந் தாலுகாவிலும் இருத்தலால் இம் மிழயைக் கூற்றம் அத் தாலுகாக்களில் இருந்தது என்பது தேற்றம். இனி. சிவனடியார் அறுபத்து மூவருள் ஒருவரும் நெல்வேலி வென்ற தின்ற சீர்நெடுமாறனார்க்கு அமைச் சரும் ஆகிய குலச்சிறை நாயனாரது மணமேற்குடியும் வீரசோழியத்தின் ஆசிரியராகிய புத்தமித்திரனாரது பொன்பற்றியும் மேற்கூறிய மிழலைக் கூற்றத் தூர்களே யாம். 5. முத்தூற்றுக் கூற்றம்: இது முத்தூர்க் கூற்றம் என்றும் வழங்கப் படுவதுண்டு. 24-ஆம் புறப்பாட்டால் இது பழைய வேளிர்க்குரிய தென்பதும் தெல் வினை விற் சிறந்தது என்பதும் இனிது புலப்படுகின்றன. பாண்டி மண்டலத்து முத்தூர்க் கூற்றம்! என்றும், முத் தூற்றுக் கூற்றத்துப் பொய்கை நல்லூர்' என்றும், 'முத்தூற்றுக் கூற்றத்துத் திருப்புனவாயில்' என்றும், 'முத்தூற்றுக் கூற்றத்துத் தித்தானம்' என்றும் கல்வெட் டுக்கள் கூறுவதால், முத்துற்றுக் கூற்றம் அவ்வூர் களேத் தன்னகத்துக் கொண்டு பாண்டி மண்டலத்திலிருந்த ஓர் உள் நாடு என்பது பெறப்படுகின்றது. அவ்வூர்களுள் திருப்புனவாயிலும் பொய்கை நல்லூரும் தஞ்சாவூர் ஜில்லா வில் அறந்தாங்கித் தாலுகாவிலும், தித்தாண்ட தானபுரம் என்று வழங்கும் தித்தானம் இராமநாதபுரம் ஜில்லாவில் திருவாடானைத் தாலுகாவிலும் இருத்தலால் இக்கூற்றம் | VII No. 429.

  • . No. 1042. 3. "South Indian Iricriprions Vol. VIII. No. 210, 213. 4. Ins. No. 599 of 1326-27.

1.