பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

119 கயிலாய ஞான உலா என்னும் நூல் இவ்வூரில் மாசாத் தனாரால் முதலில் வெளியிடப்பட்டது என்பர் சேக்கிழா சடிகள், திருச்சிராப்பள்ளி ஜில்லாவில் முசிறி தாலுகாவி லுள்ள திருப்பட்டூர் என்பது முற்காலத்தில் திருப்பிடவூர் என்ற பெயருடைய தாயிருந்தது என்பது இவ்வூர்க் கோயிலிலுள்ள ஒரு கல்வெட்டால் புலப்படுகிறது. 1 எனவே இத் திருப்பட்டுரே சங்க காலத்துப் பிடவூராதல் வேண்டும் என்பது நன்கு துணியப்படும். மாறோக்கம்: இது, நப்பசலையார் என்ற தல்லிசைப் புலமை. நங்கையரின் ஊராகும். இவருடைய பாடல்கள் புறநானூற்றில் உள்ளன. தொல்காப்பியச் சொல்ல திகாரத்துப் பெயரியல் 10-ஆம் சூத்திரத்தின் விசேட வுரையில் ஆசிரியர் சேனாவரையர், புறத்துப் போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண்மகளை மாறோக் கத்தார் இக்காலத்துப் பெண்மகன் என்று வழங்கும் என்று கூறியுள்ளனர் மாறோக்கம் என்பது கொற்கை யைச் சூழ்ந்த நாடு என்பர் அதன் பதிப்பாசிரியர் எனவே, மாறோக்கம் என்றது மாறோக்கம் என்னும் நாட்டின் 'தக்க நகராய்த்' தென்பாண்டி நாட்டில் கொற்கைப் பக்கத்தில் இருந்ததோர் ஊராதல் வேண்டும். ஆனால் மாறோக்கம் என்ற நாடு ஒன் றிருந்தது என்பதைக் கல்வெட்டுக் களின் துணைகொண்டு அறிய இயலவில்லை. கொற் கையச் சூழ்ந்த நாட்டைக் குடநாடு என்றே கல்வெட் டுக்கள் குறிப்பிடுகின்றன. குடநாடே முற்காலத்தில் மாறோக்க நாடு என்று வழங்கியதோ என்ற ஐயம் நிகழ்கின்றது. | 1, Ins. No. 591 of 1907-08.