பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

122 கண்டமையின், கொங்கு நாட்டுக் கருவூரே சங்க காலத்து வஞ்சி என்று சிலர் கூறுவராயினம், வஞ்சி குடமலை நாட்டில் உள்ளது; கருவூர் கொங்கு நாட்டில் உள்ளது. வஞ்சி தண்பொருநையாற்றங்கரையில் உள்ளது; (புறம்: 11,387) கருவூர் ஆன் பொருறை யாற்றங் கரையில் உள்ளது. (அகம், 93) வஞ்சி கடற்கரைப் பட்டினம் (சிலப்பதிகாரம், கால்கோட்காதை 80, 81), கருவூர் உள் நாட்டிலுள்ளதோர் ஊர். எனவே, கருவூர் சங்ககாலத்து வஞ்சி எனல் பொருந்தாது. கொங்கு நாடு குடமலை நாட்டுச் சோன் ஆட்சிக்குட்பட்டிருந்ததாயினும், அவன் தலை நகர் குடமலை நாட்டில் தானே இருந்திருத்தல் வேண்டும்; கொங்கு நாட்டில் இருந்தது எனக் கோடல் எங்ஙனம் பொருந்தும்? இங்கிலாந்து மன்னரின் தலை நகர மாகிய இலண்டன்' மாதகர் இங்கிலாந்திலேதான் திருக் கின்றது; அவரது ஆட்சிக்குட்பட்ட ஸ்காட்லாந்திலும் அயர்லாந்திலும் இல்லை. ஆகவே, குடமலை நாட்டிலுள்ள திருவஞ்சைக் களத்தைத் தன்னகத்துக் கொண்ட கொடுங்கோளுரே சங்க காலத்து வஞ்சி என்பது திண்ண ம். 7. தகடூர்: கடையெழு வள்ளல்களுள் ஒருவனாகிய அதியமான் நெடுமானஞ்சி என்பான் வீற்றிருந்து அரசாண்ட நகரம் தகடுர் என்பது முன்னர்க் கூறப் பட்டது. சேலம் சில்லாவிலுள்ள தர்மபுரித் தாலுகாவின் தலை நகராகிய தர்மபுரியே முற்காலத்தில் தகடூர் என்ற பெயருடன் விளங்கியது என்பது அவ்வூரிலுள்ள மல்லிகார்ச் சுனரது கோயிலில் காணப்படும் ஒரு கல்வெட்டால் புலப் படுகிறது. இதனை, 1 "ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்ரவர்த்தி - 1: South Indian Inscriptions Vol, VIII, No. 534.