பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

123 கன் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு பன்னிரண் டாவது நிகரிலி சோழ மண்டலத்துக் கங்க நாட்டுத் தகடூர் நாட்டுத் தகடூரில்' என்ற ஒரு கல்வெட்டுப் பகுதியினால் தன் குணரலாம். 5. சில வழக்கங்கள் புறகானூற்றிலும் கல்வெட்டுக்களிலும் பொதுவாகக் காணப்படும் சில வழக்கங்கள். - பண்டைத் தமிழ் வேந்தருள் சிலர், சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வாக் கடுங்கோ வாழியா தன், கோட்டம் பலத்துத் துஞ்சிய மாக்கோதை, கும் கிள்ளிவளவன், இலவத்திகைப் பள்ளித்துஞ்சிய தலங் கிள்ளி, குருப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன், காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி, இலவந்திகைட்பள்ளித் துஞ்சிய நன்மாறன், கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி, சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன், வெள்ளியம் பலத்துத் துஞ்சிய பெருவழுதி என்று புறநானூற்றில் 1 குறிப்பிடப் பட்டுள்ளனர். இதனால், அரசர்கள் இறந்த பின்னர் அவர்கள் இறந்த இடங்களை அன்னோர் பெயர் களுக்கு முன்னர்ச் சேர்த்து வழங்குவது பண்டை வழக்கு என்பது புலப்படுகின்றது. கல்வெட்டுக்களில் காணப் படும் தொண்டைமானாற்தார்த் துஞ்சிய உடையார்' 2 ஆற்றச்த் துஞ்சிய உடையார் அரிஞ்சய தேவர் பொன் மாளிகைத் துஞ்சிய சுந்தரசோழ தேவர்' என்ற தொடர் - 1- புறம்: 387, 245, 41, 61, 58, 47, 196, 51, 59, 2. S. 1. I. Vol. III, No. 142. do Nos. 15, 16.