பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

124 | களால் இவ்வழக்கம் கி. பி. 10, 11-ம் நூற்றாண்டுகளிலும் சோழ மண்டலத்தில் இருந்தது என்பது நன்கு வெளியா கின்றது. இனி, கற்புடை மகளின் தம் கணவர் இறந்த பின் தீப்பாய்ந்துயிர் நீத்தல், வீரங்காட்டிப் பொருது போர்க் களத்தில் உயிர் துறந்த வீரர்களை நினைவு கூர்தற் பொருட்டுக் கல் நடுதல் ஆகிய செயல்கள் முற்காலத்தில் இருந்தன என்பது புறநானூற்றால் புலனாகின்றது. இவை கி. பி. 10, 11, 12-ஆம் நூற்றாண்டுகளிலும் நம் தமிழகத் தில் வழக்கில் இருந்தன என்பது பல கல்வெட்டுக்களாலும் செப்பேடுகளாலும் அறியப்படுகின்றது. இவற்றை எடுத் துக்காட்டுகளால் விளக்கப்புகின் இக்கட்டுரை மிக விரியு மாதலின் இந்த அளவில் நிறுத்திக் கொண்டேன். 6. சில குறிப்புக்கள் புறநானூற்றில் காணப்படும் சில சொற்ருெடர்களை யும் சொற்களையும் பற்றிய குறிப்புக்கள். 1. முதுகன்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார் என்ற புலவர் பாடிய பாடல்கள் புறநானூற்றில் காணப் படுகின்றன. உறையூர் என்பது அப்புலவரது ஊர்; சாத்தனார் என்பது அவரது இயற்பெயர். எனவே முது கண்ணன் என்பது எதனை உணர்த்தும் என்று ஈண்டு ஆராய்வது இன்றியமையாததாகும், முதுகண் என்பது தமது நெருங்கிய கிவளஞராயுள்ள இளைஞர்க்கும் பெண் டிர்க்கும் அவர்கள் பொருள்களுக்கும் பாதுகாவலராக நிலவிய, ஆண்டில் முதிர்ந்த ஆண்மக்கட்குரிய பெயராக முற்காலத்தில் வழங்கியுள்ளது என்பது கல்வெட்டுக் கலால் தெரிகிறது. இதனை, 'இச் சுந்தரப்பட்டகாயே