பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

128 ஆம் நூற்றாண்டிலும் இப்பெயருடைய கலங்கள் நம் தமிழ் நாட்டுக் கோயில்களில் இருந்தமை அறியத்தக்கது. வட மொழியாளர் மண்டையைக் கபலம் என்று கூறுவர். 3. முடிகாகராயர்: சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலா தனைப் பாடிய புலவர் முரஞ்சியூர் முடிநாக ராபர் என்பது புறநா அற்றால் அறியப்படுவது. இப் பெயருடைய தலைச்சங்கப் புலவர் பலர் இருந்தார் என்று இறைஞர் அகப்பொருள் உரை கூறுகின்றது. பிற் காலச் சோழர் காலத்துக் கல்வெட்டுக்களில் காணப்படும் கச்சிராயர், காலிங்கராயர், சம்புவராயர், காடவராயர், சேதிராயர் போன்ற தொடர்கள் சங்க நாளில் வழக்கில் இல்லை. அன்றியும், ரகரத்தை மொழி முதலாகக்கொண்ட 'ராயர்' என்ற சொல் சங்க காலத்தில் வழங்கலில் என்பது கற்று அறிந்ததே. ஆகவே, முடிநாகராயர் என்பது முடிநாகனார் என் திருந்திருக்குமோ என்ற ஐயப்பாடு உண்டாகின்றது. இதனை அறிஞர்கள் ஆராய்ந்து விளக்குவார்களாக. கழஞ்சு: 'ஏருடைய விழுக் கழஞ்சிற் சீருடைய இழை பெற்றிசினே' என்னும் புறப்பாட்டடிகளில் கழஞ்சு பயின்று வருகிறது. மணி, பொன், வெள்ளி முதலான உயர்ந்த பொருள்கள் கழஞ்சு, மஞ்சாடி, குன்றி என்பவற்றாலும், செம்பு, பித்தளை, வெண்கலம் முதலான தாழ்ந்த பொருள் கள் பலம், கஃசு என்றும் நிறைகற்களாலும் முற்காலத்தில் நிறுக்கப்பட்டு வந்தன என்பது பல கல்வெட்டுக்களால் புலப்படுகிறது. இரண்டு குன்றி கொண்டது ஒரு மஞ்சாடி யாகும்; 20 மஞ்சாடி கொண்டது ஒரு கழஞ்சு. எனவே, 40 குன்றி கொண்டது ஒரு கழஞ்சு என்பது வெளிப்படை.