பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பத்துப் பாட்டும் கல்வெட்டுக்களும் பத்துப்பாட்டு என்பது சங்கத்துச்சான்றோர் எண் மரால் இயற்றப்பட்டுக் கடைச்சங்கத்திறுதிக்காலத்தில் தொகுக்கப்பெற்ற பத்துப்பாடல்களைத் தன்னகத்துக் கொண்ட ஒரு நூலாகும். இது பண்டைத் தமிழ்மக்க ளுடைய வரலாறுகளையும் வழக்க ஒழுக்கங்களையும் நம்மனோர்க்கு நன்குணர்த்தும் பெருமை உடையது. காலஞ்சென்ற பேராசிரியர் பெ. சுந்தரம்பிள்ளை அவர்கள் தம் மனோன்மணீயம் என்னும் நாடகத்தில், 'பத்துப்பாட் டாதிமனம் பத்ரினர் பற்றுவரோ எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணயில் கற்பனையே' என்று இவ்வரிய நூலைப் பாராட்டியிருப்பது குறிப்பிடத் தக்கது. இதில் ஆற்றுப்படைகளாக வுள்ளவை, திருமுரு காற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப் படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் என்பன. எஞ்சியவை முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல் வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை ஆகிய ஐந்தும்