பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

f29 ஆகும். இப்பாடல்களைத் தன்பாறீகொண்ட பத்துப்பாட்டு கி. பி. இரண்டாம் நூற்றாண்டிலா தல் அதற்கு முன்ன ராதல் தோன்றியிருத்தல் வேண்டும் என்பது அறிஞர்களது கொள்கை, தமிழ் நாட்டில் கோயில் சுவர்களில் பொறிக்கப் பெற்றுள்ள தமிழ்க் கல்வெட்டுக்கள் கி. பி. ஏழாம் நூற முண்டுமுதல் தான் காணப்படுகின்றன. ஆகவே, தமிழக் கல்வெட்டுக்கள் எல்லாம் பத்துப்பாட்டிற்குக் காலத்தால் மிகப்பிற்பட்டனவேயாம். எனினும், பத்துப்பாட்டும் கல் வெட்டுக்களும் தமிழ் மக்களுடைய வரலா றுககா யுணர்த்து வதில் தம்முள் ஒற்றுமையுடையனவேயாம். இனி, கல்வெட்டுக்களால் விளக்கமுற்று உறுதி யெய்தும் பத்துப்பாட்டுச் செய்திகளுள் சிலவற்றைக் காண்பாம். | 1. கடைச்சங்கப் புலவருள் ஒருவரும் குறிஞ்சிப் பாட்டின் ஆசிரியரும் ஆகிய கபிலர், திருக்கோவலூரில் பெண்ணை யாற்றங்கரையில் தீப்பாய்ந்து உயிர் நீத்தனர். என்றும் அப்புலவர் பெருமானே நினைவுகூர் தற்பொருட்டு அவ்விடத்தில் ஒரு நடுகல் நிறுவப்பெற்றது என்றும், அக்கல், கபிலக்கல்' என்று அந்நாளில் வழங்கப்பட்டது என்றும் திருக்கோவலூர் வீரட்டானேசுவரர் கோயிலில் முதல் இராசராசசோழன் ஆட்சியில் கி. பி. 1012-ல் வரையப்பெற்ற கல்வெட்டொன்று கூறுகின்றது. அகவற் பாவில் அமைந்துள்ள அக் கல்வெட்டுப்பகுதி, 'வன்கரை பொருது வருபுனற் பெண்ளைத் தென்கரை யுள்ளது தீர்த்தத் துறையது மொய்வைத் தியலு முத்தமிழ் நான்மைத் தெய்வக் கவிதைச் செஞ்சொற் கபிலன் மூரிவண் டடக்கைப் பாரிதன் எடைக்கலப்