பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

131 அப்படையெழுச்சியில் பாண்டிவேந்தனால் சோழநாட்டில் இடிக்கப்படாமல் விடப்பெற்றது. முற்காலத்தில் பட்டினப்பாலை பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனார்க் குச் சோழன் கரிகாற்பெருவளத்தான் பரிசிலாக வழங்கி யிருந்த பதினாறுகால் மண்டபம் ஒன்றுதான் என்று மேலே குறிப்பிட்ட சுந்தரபாண்டியன் கல்வெட்டு உணர்த்துவது காண்க. 3. திருவண்ணாமலையில் கி. பி. பதின்மூன்றாம் நூற் கண்டில் வரையப்பெற்ற கல்வெட்டொன்று, தொண்டை மண்டலத்தில் பல்குன்றக்கோட்டத்திலுள்ள செங்கைமாவி விருந்து அரசாண்ட வேள் நன்னன் என்பவளையும் அவன்மீது ஓரணியமுட்டத்துப் பெருங்குன் நூர்ப் பெருங் கௌசிகனார் பாடிய மலைபடுகடாம் என்ற நூலையும் குறிப் பிடுதல் அறியற்பாலதாகும். அக்கல்வெட்டுப்பகுதி, 'நல்லசைக் கடாம்புனை தன்ளன் வெற்பில் வெல்புக ழனைத்தும் மேம்படத் தக்கோன் வாகையுங் குரங்கும் விசையமுத் தீட்டிய அடப்புளை நெடுவேல் ஆட்கொண்ட தேவன்' என்பதாம். (S. I. I. Vol. No. 63) இதில், நல்லிசைக் கடாம்புளை நன்னன்' என்ற தொடர் 'இனிய ஓசையமைந்த மலைபடுகடாம் என்னும் தூல் கொண்டு புகழ் எய்திய நன்னன்' என்று பொருள் படுதல் அறிக. அன்றியும், இதில் குறிக்கப்பெற்ற தன்னன் வெற்பு என்பது மலைபடுகடாத்தில் 'நீரகம் பனிக்கும் அஞ்சுவரு கடுந்திறற்--பேரிசை நவிரம்' எனவும், 'வாய்வனம்பழு நிக்--சுழைவார் தவிரம்' எவுைம் சிறப்பித்துக் கூறப்பெற்றுள்ள நவிரமபேயா தல்வேண்டும்