பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

132 இந்தவிரமயே இக்காலத்தில் திருவண்ணாமலைக்கு வட ' மேற்கே திரிசூலகிரி, பர்வதமலை என்ற பெயர்களுடன் உளது. மலைபடுகடாத்தில் தன்னன் 'குன்றுசூழ் இருக்கை நாடு கிழவோன்' என்று பெருங்கேள சிகனார் என்ற புலவர் பெருமானால் பாராட்டப்பெற்றுள்ளனன். அக்குன்றுசூழ் இருக்கை நாடு என்பது முற்காலத்தில் தொண்டைமண்ட லத்திலிருந்த இருபத்து நான்கு கோட்டங்களுள் ஒன்றாகிய பல்குன்றக் கோட்டத்தையே குறிக்கும் என்பது பல கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது. மலைபடுகடாத்தின் ஆசிரியராகிய பெருங்கௌசிக அது பெருங்குன்றூர் இரணியமுட்ட நாட்டின்ல தோர் ஊராகும். இரணியமுட்டநாடு என்பது பாண்டிமண்டலத்தி லிருந்த உள் நாடுகளுள் ஒன்று என்பதும் அந்நாடு மதுரை மா நகர்க்கு வடகிழக்கேயுள்ள ஆனை மலை, அழகர்கோயில் (திருமாலிருஞ்சோலை ) முதலான ஊர்களைத் தன்னகத்துக் கொண்ட ஒரு பெரு நிலப்பரப்பு என்பதும் கல்வெட்டுக் களால் அறியக்கிடக்கின்ற ன. (S. 1. 1., Vol. III. No. 106) எனவே, பெருங்கொ சிகனாருடைய பெருங்குன்றூரும் அப் பதியில் தான் இருத்தல்வேண்டும் என்பது திண்ணம். ஆகவே, அக் கவிஞர் கோமான் பாண்டிதாட்டுப் புலவர் என்பது உணரற்பாலதாம். 4. சிறுபாணாற்றுப்படையின் தலைவனாகிய நல்லியக் கோடனுடைய ஓய்மானாடு என்பது தொண்டைமண்ட லத்தில் திண்டிவனம் புகைவண்டி நிலையத்திலிருந்து கிழக்கேயுள்ள கடற்கரையில் பரவியிருந்த ஒரு பெரும் நிலப்பரப்பாகும். திண்டிவனம், கிடங்கில், திரு.அரைசிலி முதலான ஊர்கள் ஓய்மானாட்டில் இருந்தவை என்பதும் அந்நாடு சோழர்களது ஆட்சிக்காலங்களில் விசைய