பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

138 பானைச் செல்கெழுகுட்டுவன், கங்காய்க்கண்ணி நார் முடிச்சேரல், கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன், ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் ஆகிய ஐவரும் உதியன் மரபினர் ஆவர்; செல்வக்கடுங்கோ வாழியாதன், தகடு ரெறிந்த பெருஞ்சேர விரும்பொறை, இளஞ்சேர விரும் பொறை ஆகிய மூவரும் இரும்பொறை மரபினர் ஆவர். இரண்டாம் பத்தின் தலைவன் இமயவரம்பன் நெடுஞ் சேரலா தன் உதியஞ் சேரலுடைய மகன் என்பது பதிகத் தால் அறியப்படுகிறது. ஆகவே, இந்நாளில் கிடைக் காத முதல்பத்து, நெடுஞ்சேரலாதன் தந்தையாகிய உதியஞ்சேரலின் மீது பாடப்பட்டதாயிருத்தல் வேண்டும். மூன்றாம் பத்தின் தலைவன் பல்யானைச் செல் கெழு குட்டுவன் என் போன் நெடுஞ்சேரலாதனுக்குத் தம்பியாவன். நான்காம் பத்தின் தலைவன் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல், ஐந்தாம்பத்தின் தலைவன் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், ஆறாம்பத்தின் தலைவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆகிய மூவரும் நெடுஞ்சேர லா தனுடைய மக்கள் ஆவர். எனவே, பதிற்றுப்பத்துள் முதல் ஆறு பத்துக்களும் உதியஞ்சேரல். அவன் புதல்வர் இருவர், அவன் போன்மார் மூவர் ஆகிய அறுவர் மீதும் பாடப்பெற்றவை எனலாம். ஏழாம்பத்தின் தலைவன் செய்வக் கடுங்கோவாழி யாதன் என்பான், அந்துவஞ் சேர லிரும்பொறையின் மகன் ஆவன், எட்டாம் பத்தின் தலைவன் தகடுசெறிந்த பெருஞ்சேர லிரும்பொறை என்பவன், செல்வக் கடுங் கோவின் புதல்வன் ஆவன். ஒன்பதாம் பத்தின் தலைவன் இளஞ்சேர லிரும்பொறை என் போன் பெருஞ்சேர விரும்