பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

140 வூர்கள் பலவா தல் தெள்ளிது. ஒரே காலப் பகுதியில், சேர நாட்டிலிருந்த இவ்விரு வேந்தர்களின் பெருங் கொடைத்திறம் யாவர்க்கும் இறும்பூதளிக்கும் இயல்பின தாகும். பல்யானைச் செல்கெழுகுட்டுவன் பாலைக் கௌதமனார் விரும்பியவாது பத்துப் பெரு வேள்விகள் செய்வித்து அப் புலவர் தம் மனைவியுடன் விண்ணுலகம் பு'ச் செய்தான். இவ்வரசனுடைய தமயன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாத துடைய அரும்பெறற் புதல்வராகிய இளங்கோவடிகள் தாம் பாடிய சிலப்பதிகாரத்தில் நான் மறையாளன் செய்யுட் கொண்டு, 'மேனிலையுலகம் விடுத்தோ னாயினும்' என்ற அடிகளில் இந்நிகழ்ச்சியைக் குறித்திருத்தல் காணலாம். இவ்வேந்தன் இறுதியில் துறவு பூண்டு காடுபோந்தனன் என்பர். களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், காப்பியாற்றுக் காப்பியனார்க்கு நாற்பது நூறாயிரம் பொன்னும் தான் ஆளுவதிற் பாகமும் அளித்தான், இவன் தம்பி ஆடுகோட் பாட்டுச் சேரலாதன், காக்கைபாடினியார் நச்செள்ண யார்க்கு அணிகலனுக்காக ஒன்பது துலாம் பொன்னும் அருயிரம் பொற்காசும் வழங்கினான். இவர்களுள் பின்னோன் மேல் கடற்கரையிலிருந்த தொண்டியைத் தலை நகராகக்கொண்டு அதனைச் சூழ்ந்த நிலப்பரப்பை. ஆட்சி புரிந்தனன் என்று தெரிகிறது. கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், பரணர்க்குத் தன் ஆட்சிக்குட்பட்ட உம்பற்காட்டு' வருவாயையும் தன் மகன் குட்டுவன் சேர வேயும் கொடுத்தனன். இவன் தன் புதல்வன் அப் புலவர் பெருமான் பால் கற்றுவல்லகுதலை விரும்பி அங்ஙனம் அளித்தனன் போலும்,