பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

4. கூத்தராற் குறிக்கப்பெற்ற சில தலைவர்கள். கவிஞர் பெருமாகுகிய ஒட்டக்கூத்தர், விக்கிரம சோழன் இரண்டாம் குலோத்துங்கசோழன், இரண்டாம் இராசராச சோழன் ஆகிய மூவேந்தர்களது ஆட்சிக்காலங் களிலும் அன்னோரது அவைக்களப் புலவராக விளங்கி பெரியார் என்பது யாவரும் அறிந்ததொன்றும். அவ் வேந்தர்கள் பால் அமைச்சர்களாகவும் படைத் தலைவ களரகவும் பிற அதிகாரிகளாகவும் திகழ்ந்து நாட்டிற்கு நலம் புரிந்தவர்கள் பலர் ஆதல்வேண்டும். அவர்களது வீரச்செயல்களும் கொடைச்சிறப்பும் அருந்தொண்டுகளும் தம் தமிழகத்திலுள்ள கோயில்களில் காணப்பெறும் கல்வெட்டுக்களால் இன்றும் அறியக் கிடக்கின்றன. அவர்களது வள்ளன்மையால் மாண்புடன் வாழ்ந்துவந்த புலவர் பெருமக்கள் அன்னோரைப் பாராட்டிப் பாடியுள்ள பல பிரபந்தங்களும் இருந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். வச்சத்தொள்ளாயிரம், அரும்பைத் தொள்ளா யிரம், புதுவைக் காங்கேயன் தாலாயிரக்கோவை, செஞ்சிக் ' கலம்பகம், வங்கர்கோவை, அரையர்கோவை முதலியன