பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

148 என்னும் பெரும்போர் இகல்வேந்தர் மண்டலிகர் முன்னு மிருமருங்கு மொய்த்தீண்ட---" என்னும் விக்கிரம சோழனுலாவடிகளிற் காண்க. இதில் குறிக்கப்பெற்ற தலைவர்கள் எல்லோரும் விக்கிரம சோழன் ஆட்சிக்காலத்தில் விளங்கியவர்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை. அவர்களைப் பற்றி இந் நூலால் அறியக்கூடியது இவ்வா வேயாகும். ஆயினும், விக்கிரம சோழன் காலத்திய கல்வெட்டுக்களின் துணை கொண்டு அவர்களைப் பற்றிய செய்திகளை நாம் ஆராய்தல் அமைவுடையதேயாம். இனி, இவ்வுலா எழுதப்பெற்ற காலத்தை ஒருவாறு உய்த்துணர்வதற்கு இடமுண்டு. இவ்வுலா விற் குறிக்கப் பெற்ற தலைவர்களுள் காலிங்கர்கோன் என்பானும் ஒருவன் என்பது மேலே காட்டியுள்ள பகுதியினால் நன்கு விளங்கும். இவன் மணவிற்கூத்தனான காலிங்கராயன் எனவும் அரும்பையர்கோன் எனவும் அரும்பாக்கிழான் எனவும் வழங்கப்பெற்றனன் என்பது கல்வெட்டுக்களால் அறியப் படுகின்றது. இவன், முதற் குலோத்துங்க சோழனது படைத்தலைவர்களுள் ஒருவனாக விளங்கியதோடு விக்கிரம் சோழனது ஆட்சியின் முற்பகுதியிலும் அத்தகைய உயர் நிலையிலிருந்துள்ளனன். அதுபற்றியே, கவிச் சக்கரவர்த்தி யாகிய ஓட்டக்கலத்தரும் இத் தலைவனைத் தாம் பாடிய உலாவில் உரிய இடத்தில் வைத்துப் பாராட்டுவாராயினர், இவனது கல்வெட்டுக்கள் விக்கிரமசோழனது ஆட்சியின் ஆறாம் ஆண்டிற்குப் பின்னர் நம் நாட்டில் காணப்பட வில்மே யாதலின் அவ்வாண்டிற்குப்பிறகு இத்தகபவன் இருத்திலன் என்பது ஒரு தயே. ஆகவே, இக் காலிங்கர்