பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

150 விளங்கியவன். அவ் வேந்தனது ஆட்சியின் பிற்பகுதியில் இவன் முதலமைச்சனாகவும் படைத்தலைவனாகவும் இருந் தவன். இவனது கலிங்க வெற்றிலைப் பாராட்டித்தான் கலிங்கத்துப்பரணி என்னும் நூல் முதற்குலோத்துங்க சோழன் மீது கவிச் சக்கரவர்த்தியாகிய சயங்கொண்டாரால் பாடப்பெற்றது. அந்நூல். இவளை, 'அபயன் மந்திரி முதல்வன்' எனவும் வண்டையராசன் அரசர்கள் நாதன் மந்திரி உலகுபுகழ் கருணாகரன்' எனவும் 'கலிங்கப்பரணி நம் காவலனைச் சூட்டிய தோன்றல்' எனவும் "தொண் டையர் வேந்தன்' எனவும் புகழ்தல் காண்க. இவன், கருணாகரன் என்னும் பெயரினன்; தொண்டைமான் என்னும் பட்டம் பெற்றவன்; பல்லவர் தோன்றல்; ஒப் பற்ற வீரமும் ஆற்றலும் படைத்தவன்; தமிழர்களது வீரச்செயல்களைப் பிற நாட்டினர் உணரச்செய்தவன்; சோழ மண்டலத்தில் நாச்சியார் கோயிலுக்குத் தெற்கேயுள்ள தும் வண்டு வாஞ்சேரி என்று இந்நாளில் வழங்கப்படுவதுமாகிய வண்டாழஞ்சேரி என்னும் ஊரில் வாழ்ந்தவன். இவனது மனைவியார் அழகிய மணவாளனி மண்டையாழ்வார் எனப்படுவர். இவ்வம்மையார் காஞ்சியிறுள்ள அருளான பெருமாளுக்கு நந்தாவிளக்கு ஒன்று வைத்துள்ளமை ஒரு கல்வெட்டால் புலப்படுகின்றது. அப்திலதேல். இவனைப் பற்றிய சில செய்திகள் மறைந்தொழித்திருக்கு மென்பது திண்ணம். அக் கல்வெட்டை அடியிற் காண்க, பஸ்வஸ்திஸ்ரீ கோ இராஜகேசரிவன் மரான திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீகுலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு நாற்பத்து மூன்று. ஜயங்கொண்ட சோழ மண்டலத்து எயிற்கோட்டத்து எயில் நாட்டுத் திருவத் தியூர் ஆழ்வார்க்குச் சோழமண்டலத்துக் குலோத்துங்க