பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

151 சோழவள நாட்டுத் திருநறையூர் நாட்டு வண்டாழஞ்சேரி புடையான் வேளான கருணாகரனரான தொண்டைமானார் தேவியார் அழகிய மணவாளனி மண்டை யாழ்வார் வைத்த திருதுந்தா விளக்கு ............ (S. 1. I. Vol. IV, No. 862) 2. முனையர்கோன்:- இவன் விக்கிரம சோழனது அமைச்சர்களுள் ஒருவன். இவனைப்பற்றிய செய்திகள் இதுகாறும் அச்சிடப்பெற்று வெளிவந்துள்ள கல்வெட்டுக் களில் காணப்படவில்லை. இவன் முனையரையன் முனையம் ரையன் என்ற பட்டங்களுள் ஒன்றைப் பெற்றவனாதல் வேண்டும். 3. சோழகோன்: - இவன் விக்கிரம சோழனது. அமைச்சனும் படைத் தலைவனுமாக விளங்கியவன். இவன் அரசனால் கொடுக்கப்பட்ட 'சோழகோன்' என்ற பட்டம் பெற்றவன். இவனது இயற்பெயர் பூபாலசுந்தர னென்பது. இவனது மனைவியார் கற்பகம் இராசேந்திர சோழியார் என்பவர். இவ் வம்மையார் சி. பி. 1115ல் கொள்ளிடத்தின் வடகரையில் திருமழபாடியில் எழுந்தருளி யுள்ள சிவபெருமானுக்குத் திருதுந்தாவிளக்கு ஒன்று வைத்து அதற்காகத் தொண்ணூறு ஆடுகள் வாங்கி விட்டனர் என்று அக் கோயிலிலுள்ள ஒரு கல்வெட்டு உணர்த்துகின்றது. இதகுல் இச்சோழகோன் முதற் குலோத்துங்க சோழன் ஆட்சியிலும் அரசியல் அதிகாரிக ரூன் ஒருவனாக இருந்திருத்தல் வேண்டுமென்பது தேற்றம். இவன் கங்கர், மகாராட்டிரர், கலிங்கர், கொங்கர், குடகர் முதலானோரைப் போரில் வென்று வாகை சூடியவன் என்பது விக்கிரமசோழன் உலாவினால் அறியப்படுகின்றது.